வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தன் தந்தையை கண்டதும் விஜய் செய்த விஷயம் – வீடியோ இதோ.

0
686
Sac
- Advertisement -

வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தன் தந்தையை கண்டதும் விஜய் செய்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையில் வெளியாக இருக்கிறது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாக ஏற்கனவே பிரச்சனை தொடங்கியது. பொங்கல் பண்டிகைகளில் தெலுங்கு படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திற்கு தமிழகத்தில் குறைவான திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசி இருந்தார். உதயநிதி ஸ்டாலின் துணிவு படத்தை வெளியிடுவதால் தான் வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகள் அளிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சென்னை செங்கல்பட்டு நார்த் ஆர்காடு சவுத் ஆர்காடு கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் வாரிசு படத்தை redgaint நிறுவனம் வெளியிடும் என்று அறிவிப்புகள் வெளியானது.

- Advertisement -

பொதுவாக விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான். மேலும், அப்படி படத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் எதையாவது பேசிவிடுவார். இதனாலேயே விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் வாரிசு படத்துக்கும் பல பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது.

இதனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சி மற்றும் அவரது தாயார் சோபாவும் வந்து இருந்தனர். சமீப காலமாகவே விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார்.இதனால் அவரிடம் விஜய் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும், இருவருமே சுத்தமாக பேசிக் கொள்வதில்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அதற்கேற்ப சமீபத்தில் தன்னுடைய 80வது பிறந்தநாளை எஸ் ஏ சந்திரசேகர் கொண்டாடி இருந்தார். அதற்கு கூட விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து சொல்லவில்லை என்றும் நெட்டிசன்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த எஸ் ஏ சி ‘, என் பையன் என்னை மதிக்கவில்லை என்று நான் எங்கேயாவது சொல்லி இருக்கேனா?, பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் இந்த உலகில் சிறந்தவன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் உள்ளே வந்த போது தனது தந்தையை கண்டதும் அவரை கட்டி அனைத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement