நடிகை தந்த வீடியோ ஆதாரம், தினேஷுக்கு வந்த சிக்கல் – இது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பஞ்சாயத்து

0
233
- Advertisement -

சின்னத்திரை நடிகர் சங்கம் நடத்திய கூட்டத்தில் ரவி வர்மா மீது எடுக்கப்பட்டிருக்கும் அதிரடி நடவடிக்கை தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தலில் தலைவராக சிவன், பொது செயலராக போஸ் வெங்கட் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் தலைமை ஏற்றபின் நிர்வாகத்தின் உடைய முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கடந்த முறை சங்க நிர்வாகத்தில் இருந்த சிலர் நிதி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவிவர்மா மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ரவி வர்மா இனி அடுத்து வரும் மூன்று தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சின்னத்திரை நடிகர் சங்கம் கூட்டம்:

அது மட்டும் இல்லாமல் சங்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள கூடாது என்று கூறியிருக்கிறார்கள். இதனை அடுத்து ரவிவர்மா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சின்னத்திரை நடிகர்கள் கூறியிருப்பது, ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நடிகர், நடிகைகளை அழைத்துக் கொண்டு மலேசியாவில் கலை நிகழ்ச்சி செய்து பணம் மோசடி செய்திருந்தார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. இதனாலே இவர் கடந்த தேர்தலிலும் தோல்வியடைந்தார்.

ரவி வர்மா மீது குற்றச்சாட்டு:

இருந்தாலும், அவருடைய அணியில் போட்டியிட்ட ராஜ்காந்த், தினேஷ் ஆகியோர் சிலர் வெற்றி பெற்றார்கள். போஸ் வெங்கட் வெற்றி பெற்றதுமே பழைய நிர்வாகத்தில் நடந்த தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவோம் என்று அறிவித்து இருந்தார். அதேபோல் தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நேற்று வரை பண மோசடி காரணமாகவே ரவிவர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

நடிகை கொடுத்த புகார்:

இப்படி இருக்கும் நிலையில் ரவிவர்மா மீது நடிகை ஒருவர் புகார் அளித்து இருக்கிறார். அந்த புகாரில் அவர், ரவிவர்மா சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். இதை வீடியோ ஆதாரமாகவும் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முன்னிலையில் அந்த நடிகை காண்பித்து இருக்கிறார். நிதி மோசடியுடன் நடிகை அளித்த புகார் சேர்த்துக் கொண்டதால் ரவிவர்மாவுக்கு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் தான் ரவி வர்மா தேர்தலில் நிற்க கூடாது என்றும், சின்னத்திரை நிகழ்சிகளில் கலங்கக்கூடாது அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தினேஷ் செய்த வேலை:

இப்படி இவர்கள் சொன்ன உடனேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தார்கள். குறிப்பாக, பிக் பாஸ் தினேஷ் உடன் இருந்த சில பேர் ரவிவர்மாக்கு ஆதரவாக கோஷமெல்லாம் போட்டிருந்தார்கள். இந்த பிரச்சினை எல்லாம் நினைத்து தான் ஏற்கனவே சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் கலவரம் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement