விஜய்யின் அரசியல் பேசுச்சுக்கு கருத்து தெரிவித்த ஐயா சகாயம்-IAS அவர்கள்

0
428
Sahayam

தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி மக்களுக்கு திருப்த்திகரமாக இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், தமிழக அரசியல் மிகவும் மோசமாக உள்ள நிலையில் சகாயம் ஐ ஏ எஸ் போன்ற நேர்மையான அதிகாரிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

sarkar

ஐ ஏ எஸ் அதிகாரியான சகாயம் அவர்கள் நேர்மையான அதிகாரி என்று மக்கள் மனதில் பெயரெடுத்தவர். மேலும், பல இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சகாயத்திடம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள சகாயம் ,தமிழ் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கு வர தகுதியும், உரிமையையும் உண்டு. அதே போல நடிகர்களுக்கும் அரசியலுக்கு வரும் உரிமை இருகிறது. அதில் யாருக்கு தகுதி இருக்கிறது என்பதை மக்கள் தான் ஆராய்ந்து தேர்தெடுக்க வேண்டும். அந்த வகையில் இக்காலத்தில் இருக்கும் இளைஞர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். அவர்களுக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.

Sagayam-IAS

நடிகர் ரஜினி கமல், சீமான், கருணாஸ் போன்ற பல நடிகர்கள் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அரசியில் கலந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.