சிவகுமாரை போன்று செல்பி சர்ச்சையில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கான்.!

0
356
Salman-Khan

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்கள் செல்போன்களை தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்களில் செல்போன்களை நடிகர் சிவகுமார் தட்டி விட்டார்.

Image result for salman khan phone snatching

அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்தியின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் சல்மான் கான் இதேபோல சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் சல்மான் கான் மும்பையில் உள்ள லிங்கிங் சாலையில் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

இதையும் பாருங்க : சரவணன் மீனாட்சி ரஷிதாவா இப்படி மாறிட்டாங்க.! மாடர்ன் உடையில் அசத்துராறே.! 

- Advertisement -

அவருடன் பல பாதுகாவலர்களும் சென்றுள்ளனர். மும்பையின் பிரதான சாலையில் சல்மான் கானை கண்டதும் பலரும் புகைப்படம் எடுக்க துவங்கியுள்ளனர். அப்போது சல்மான் கான் அருகில் காரில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

Image result for salman khan phone snatching

அவரை வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறியும் வீடியோ எடுத்தால் கோபமடைந்த சல்மான் கான் அந்த நபரின் செல் போனை பிடிங்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அந்த நபர் சல்மான் கான் மீது டி என் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement