நவீன உலகத்திற்கு ஏற்றாற் போல் அனைவரின் கைகளிலும் செல்போன் வந்து விட்டது. இந்த இன்டர்நெட் உலகத்தில் செல்போனை வைத்து சும்மா இருப்பார்களா? மீம்ஸ் போடுவது, ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று பல சோசியல் மீடியாக்களை உருவாக்கி வருகிறார்கள். அதிலும் செல்பி எடுத்து சோசியல் மீடியாவில் போடுவது தான் வழக்கமான ஒன்றாக வைத்து உள்ளார்கள். அதில் ஒரு லைக்குக்காக தங்களது உயிரையும் பணயம் வைக்கிறார்கள். பல பேர் அந்த விதத்தில் இறந்து உள்ளார்கள். மேலும், கொடுமையான விலங்குகள் முன் நின்று செல்பி எடுப்பது, வேகமாக ஓடும் ரயில் முன் நின்றும், படிக்கட்டில் தொங்கியபடியும், மேலிருந்து கீழே குதிக்கும் போது என பல்வேறு கோணங்களில் யோசித்து யோசித்து செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் அட்ராசிட்டி காண்பித்து வருகிறார்கள்.
அதிலும் சினிமா பிரபலங்கள் வந்தால் போதும் சொல்லவே வேண்டாம். முட்டி மோதி சண்டை போட்டுக்கொண்டு செல்பி எடுப்பார்கள். அந்த மாதிரி சமீப காலமாக சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரிடம் அனுமதி இல்லாமல் திடீரென்று அவர்கள் மீது பாய்ந்து அவர்கள் முகத்தின் முன்பு செல்போன் கேமராவை காட்டுவது வழக்கத்தில் ஒன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் பல பிரபலங்கள் கடுப்பாகி உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் சில பிரபலங்கள் ரசிகர்களின் செல்போனை தட்டிவிட்டு கோபமாக கூட வெளியேறி உள்ளார்கள்.
இதையும் பாருங்க : முகெனை போல சாண்டி குடும்பத்திலும் நேர்ந்த இறப்பு. சோகத்தில் சாண்டி குடும்பத்தார்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு திறப்பு விழாவிற்கு சென்ற தமிழ் முன்னணி நடிகர் சிவகுமார் அவர்கள் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை கோபத்துடன் தட்டிவிட்டு சென்று உள்ளார். அது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியது. அதே போல் பாலிவுட் நடிகர் சல்மான் கான் அவர்களை ரசிகர் ஒருவர் செல்ஃபீ எடுக்க முயன்று உள்ளார். அப்போது கடுப்பாகி போனை தட்டி சென்று உள்ளார் நடிகர் சல்மான் கான். இதற்கு முன்பு கூட நடிகர் சல்மான் கான் அவர்கள் மும்பையில் உள்ள லிங்கில் சாலையில் பயணம் செய்து இருந்தார்.
அப்போது காரில் சென்ற நபர் ஒருவர் சல்மான்கானை வீடியோ எடுத்து உள்ளார். இதனால் கோபமடைந்த சல்மான்கான் அவருடைய செல்போனை தூக்கி அடித்து அவரை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் அந்த நபர் சல்மான் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவா வந்த சல்மான் கான் அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வேக வேகமாக வெளியேறி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ரசிகர் ஒருவர் குறுக்கே நுழைந்து சல்மானுடன் செல்பி எடுக்க முயன்றார். நடிகர் சல்மான் கான் அவர்கள் ஏற்கனவே என்ன டென்ஷன்ல, எந்த மூட்ல இருந்தாரோ? தெரியல ரசிகர் செல்போனை தட்டி விட்டு வேக வேகமாக நடந்து சென்று விட்டார். தற்போது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.