நான் செய்யும் அந்த விஷயத்திற்காக சம்பளத்தைப் பாரபட்சமின்றி கொடுக்கனும் – நடிகர்களுக்கு இணையான சம்பளம் குறித்து சமந்தா.

0
220
Samantha
- Advertisement -

சமமான சம்பளம் கொடுக்க வேண்டும், அதற்காக நான் யாசகம் கேட்க மாட்டேன் என்று சமந்தா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் சமந்தா. அதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா தனக்கு Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கி இருந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். இதற்காக தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் சமந்தா இந்த பிரச்சனை காரணமாக சில படங்களில் இருந்து விலகியதாகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்தின் போது தான் இவருக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால், அந்த வலியுடன் தான் இந்த படத்திற்கான டப்பிங் பேசி முடித்தார் சமந்தா. அப்போது வெளியான புகைப்படங்களை கண்டு சமந்தாவின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்த யசோதா திரைப்படத்திற்கு பின்னர் நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார்.

சாகுந்தலம் படம்:

இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. மிகவும் புகழ் பெற்ற சாகுந்தலை புராண கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ்ராஜ், மதுபாலா பாலன், நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார்.

-விளம்பரம்-

சமந்தா அளித்த பேட்டி:

இந்நிலையில் இது இந்த தொடர்பான பேட்டி ஒன்று சமந்தா அளித்திருந்தார். அதில் அவரிடம் சம்பளம் குறித்தும் கேள்வி கேட்டதற்கு அவர் கூறியிருந்தது, தயாரிப்பாளர்கள் சம்பளத்தை தானாகவே முன் வந்து கொடுக்க வேண்டும். அதற்காக நான் ஒருபோதும் கெஞ்ச கூடாது. நான் கடுமையாக உழைக்கிறேன், போராடுகிறேன். ஆனால், சமமான சம்பளம் கொடுக்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் வெற்றியின் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களாகவே முன்வந்து சம்பளம் கொடுக்கிறோம் என்று சொல்ல வேண்டும்.

சம்பளம் குறித்து சொன்னது:

அதற்காக நான் யாசகம் கேட்பதாக இருக்கக் கூடாது. மேலும், திரைபட துறையில் இருக்கும் பெண்கள் தங்களுடைய திறமையை ஒரு வரம்புக்குள் சுருக்கிக் கொள்ளக் கூடாது. உங்களுடைய திறமை எதுவாக இருந்தாலும் அதனை முடிந்த அளவுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் என்னுடைய உடல்நிலை பாதிப்பிலிருந்து மீண்டு வருவது கொஞ்சம் மெதுவாகவும், கடினமாகவும் தான் இருக்கிறது. பழைய நிலைக்கு கொண்டு வர நான் கடுமையாக போராடுகிறேன். ஆனால், என்னுடைய வேலை என்னை தளர்வடைய செய்கிறது. நான் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது என்னை புரிந்து கொண்டு எனக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், படப்பிடிப்பு குழுவினருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்

Advertisement