மயோசிடிஸ் சிகிச்சைக்கு எனக்கு ஆகும் செலவு – விஜய் தேவர்கொண்டாவிடம் கடன் வாங்கியதாக வெளியான செய்தி குறித்து சமந்தா காட்டம்.

0
1711
- Advertisement -

மருத்துவ சிகிச்சைக்காக விஜய் தேவர்கொண்டாவிடம் சமந்தா கோடி கணக்கில் கடன் வாங்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இதுகுறித்து சமந்தாவே அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

-விளம்பரம்-
Samantha

பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற நோயால் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

இதனை அடுத்து கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த சாகுந்தலம் மாபெரும் தோல்வியை தழுவியது. கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.இதற்காக இவர் தீவிரமாக சிகிச்சையும் எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது.

இதனால் சமந்தா அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இவர் தனக்கு பிடித்த மற்றும் மனதிற்கு நிம்மதியான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக விஜய் தேவர்கொண்டாவிடம் இருந்து சமந்தா 25 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சமந்தா ‘மயோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? தவறான தகவலை உங்களுக்கு கொடுத்துள்ளனர். அதில் ஒரு சிறிய தொகையை நான் எனக்காக செலவு செய்ததில் மகிழ்ச்சியே. என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. என்னுடைய துறையில் நான் என் வேலைகள் மூலம் அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும்.

நன்றி. மயோசிடிஸ் என்பது ஒரு நிலை. அதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கும் சமந்தா ஓய்விற்காக வெளிநாடு சென்று உள்ளார். மேலும், அங்கேயே அவர் ‘மயோசிடிஸ் சிகிச்சை எடுக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement