அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் தொண்டர்கள் அதிமுக எடப்பாடி அணி, பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிளந்து இரு தரப்பு தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் மாற்றி மாற்றி மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகளை குறித்து முறையான விசாரணை வேண்டுமென்றும் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தரவேண்டும் வென்றும் பன்னீர் செல்வத்தின் தொண்டர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த தீர்மானித்து வருகின்றனர்.
பன்னீர் செல்வதுடன் இணைந்த டி.டி.வி தினகரனும் இனைந்து கொடநாடு கொள்ளை மற்றும் கொலை பற்றி விசாரணையை தீவிர படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பட்டம் செய்தனர். இதில் அமமுகவினரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் “ நான் ஆட்சிக்கு வந்தால் 30 நாட்களில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து விசாரனை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார், அது தான் அவர்க்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்தது. அவர் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிய நிலையிலும் 30 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் வழக்கு ஆமை வேகத்திலே நடைபெறுகிறது.
30 மாதங்கள் ஆகியும் இனித்த வழக்கை அதல பாதாளத்தில் தள்ளி விட்டு எதுவும் நடக்காதது போல் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு இருக்கிறார்” என்றும் அவர் கூறினார். மற்றொரு பக்கம் மதுரையில் அதிமுக நடத்துள்ள பிரமாண்ட மாநாட்டிற்கு கலந்து கொள்ளவிருக்கும் அதிமுக தொண்டர்களுக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளதாக கூறும் அதிமுக தலைவர்கள். அதிமுகவின் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு இருப்பதாக அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர். இந்த மாநாட்டின் மூலம் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஜெயக்குமாரின் பதிலடி:
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஜெயகுமார் அளித்த பேட்டியில் “பன்னீர் செல்வம் யாரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ சசிகலா டி.டி.வி. தினகரன் தற்போது அவர்கள் உடனே சேர்ந்து டி.டி.வி. தினகரனின் காலிலே விழுந்துவிட்டார்.’ஒ.பி.எஸ் தன்னை விட்டிற்கு வந்து சந்தித்ததாக ஒப்புக்கொண்டனர்.
திரைமறைவில் சந்தித்துக்கொண்ட இருந்த நிலையில் தற்போது வெளியே வந்து ஆர்ப்பாட்டம் என்ற நாடகத்தை அரேங்கேற்றியுள்ளார். மேலும் வழக்கை பற்றி கூறிய அப்போதைய ஆட்சியில் ஐஜி தலைமையில் 90% முடிந்து 790 பக்கங்ககள் அறிக்கையை அளிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதை விட குறைந்த பதவியில் உள்ள ஏ.எஸ்.பி தலைமையில் இப்பொழுது வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.