நயன்தாராவின் வாடகை தாய் சர்ச்சை யசோதா படத்திற்கு பிரீ மார்க்கெட்டிங் ஆகிவிட்டது என்று சமந்தா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.
மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். அதன் பின் தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.
வாடகை தாய் குழந்தை சர்ச்சை:
ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது குறித்து கடந்த மாதம் முழுவதும் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. பின் சுகாதாரச் சார்பில் மருத்துவர் தலைமையிலான 3 குழு விசாரணையை துவங்கி இருந்தது. அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள்.
அரசு வெளியிட்ட அறிக்கை:
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசும் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில், நயன் மற்றும் விக்கி வாடகைத்தாய் சட்டங்களை மீறவில்லை என்று கூறி இருந்தார்கள்.
இந்நிலையில் நயன்தாராவின் வாடகை தாய் சர்ச்சை யசோதா படத்திற்கு பிரீ மார்க்கெட்டிங் ஆகிவிட்டது என்று சமந்தா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்த சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
யசோதா படம்:
அந்த வகையில் தற்போது சமந்தா ஆவர்கள் இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் ‘யசோதா’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, சர்மா, கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வாடகைக்கு தாய் மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் பேன் இந்தியா படமாக கருதப்படுகிறது.
சமந்தா அளித்த பேட்டி:
இந்த படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் இந்த கிருஷ்ண பிரசாத் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அவர்கள் யசோதா படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவரிடம் நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு சமந்தா, நான் யாரையும் பற்றி பேச மற்றும் கருத்து சொல்ல விரும்பவில்லை. மகிழ்ச்சியாக இருந்தால் சந்தோசம். வாடகை தாய் முறை பற்றி அதிக அளவில் பேசுவது யசோதா திரைப்படத்திற்கு கிடைத்த பிரீ மார்க்கெட்டிங் என்று கூறியிருந்தார்.