விவகாரத்துக்கு பின் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆன சமந்தா. இன்று ஒரே நாளில் வெளியான 2 படங்களின் அறிவிப்பு.

0
2346
samantha
- Advertisement -

நீண்ட நாட்களாக நீடித்து இருந்த சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்து இருந்தது. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்தது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த 2 ஆம் தேதி இவர்கள் இருவருமே தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

இதையும் பாருங்க : ஜே ஜே படத்தில் குத்து விளக்காக நடித்த நடிகையா இது ? பிகினி உடைகளில் கொடுத்துள்ள போஸை பாருங்க.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் சமந்தா தொடர்ந்து நடித்து வந்ததாலும் பெமலி மேன் தொடரில் கவர்ச்சியாக நடித்ததாலும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதை எல்லாம் மறுத்து சமந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இப்படி ஒரு நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் என்பவரின் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதே போல முதல் தடவையாக நடிகை சமந்தா இந்தி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு சமந்தாவுக்கு சில இந்தி பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒரு கதையை தேர்வு செய்துள்ளார்.

-விளம்பரம்-

சமந்தா நடிக்கும் புதிய இந்தி படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அதே போல ஸ்ரீதேவி மூவீஸ் தயாரிப்பில் ஹரிசங்கர் – ஹரிஷ் நாராயணன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் கமிட் ஆகி இருக்கிறார். இதுவும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.

விவாகரத்திற்கு முன் நடிகை சமந்தா ஒரு சில படங்களில் நடித்து வந்தார். மேலும், நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து இருந்தார். இதனால் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வை திட்டமிட்டிருந்தார். ஆனால், விவாகரத்துக்குப் பின்னர் தன்னுடைய வாழ்க்கை மாறியதால் ஒய்வு திட்டத்தை கைவிட்டு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்

Advertisement