எவ்ளோ கம்பீரமா இருந்தவன், இன்னிக்கு விரல தூக்கினா நடுங்குது, கால் முடங்கி இருக்கு – வாகை சந்திரசேகர் உருக்கம்.

0
374
- Advertisement -

விஜயகாந்தின் நிலை குறித்து நடிகர் சந்திரசேகர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக இருந்ததால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அவருக்கு நுரையலுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு இருக்கிறது. இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

பின் அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பிரபலங்கள் பலருமே விஜயகாந்தை நேரில் பார்க்க சென்றிருக்கிறார்கள். மேலும், விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக பிரேமலதாவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். கூடிய விரைவில் வீடு திரும்பவார் என்று அவர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டார். இருந்தாலும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் எல்லாம் வைரலாகி வருகிறது. பின் இது தொடர்பாக பிரேமலதா, நீங்கள் யாரும் விஜயகாந்த் உடன் இருப்பதில்லை.

நான் மட்டும் தான் அவருடன் இருக்கிறேன். அவர் எப்படி இருக்கிறார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். அவருடைய உடல்நிலை குறித்து நான் தினமும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும், சிலர் தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தவறாக ஒரு செய்தியை பரப்புவதற்கு முன்பு யாராக இருந்தாலும் எங்கள் தலைமை கழகத்தை தொடர்பு கொண்டு விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விளக்கம் கேளுங்கள். அதை விடுத்து தேவையில்லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து அவரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்திரசேகர் பேட்டியில், விஜயகாந்த்திற்கு நெருக்கமான நண்பர்களில் நானும் ஒருவன். விஜயகாந்த் எவ்வளவு கம்பீரமாக இருப்பான் என்று எங்களுக்கு தெரியும். அவன் ஒரு சிறந்த நடிகன். எனக்கு தெரிந்து விஜயகாந்த் ஒரு நாள் கூட காய்ச்சல் தலைவலி என்று படுத்ததே கிடையாது. இயற்கையிலேயே அவர் நல்ல உடல் நலனை பெற்றிருந்தார். அப்படிப்பட்டவர் இப்போது இந்த நிலைமையில் இருப்பதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. விஜயகாந்த் நானும் 45 கால நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் ஒரே அறையில் தங்கி, ஒரே பாயில் படுத்து சினிமாவில் வளர்ந்தோம்.

இன்றைக்கும் வரை எங்கள் இருவருக்கும் இடையே நட்பு அப்படியே இருக்கிறது. விஜயகாந்த் கைகள் செயல்படாமல் இருக்கிறது, விரல்களை தூக்கினாலும் நடுங்குகிறது. கம்பீரமான அவருடைய உடலும் கால்களும், கைகளும் முடங்கி இருக்கிறது. விஜயகாந்த் மீண்டும் எழுந்து வருவார். காலம் அவரை மீண்டும் கொண்டு வரும். விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது எந்த நடிகருமே இல்லை. அவருடைய உடல்நிலை மட்டும் சரியாக இருந்தால் ஒரு பலமான ஒரு அரசியல் தலைவராக மாறியிருப்பார். நண்பா, நீ நலமுடன் எழுந்து வா. கம்பீரமாக வா, எனக்கு தெரிந்து உனக்கு காய்ச்சல் வந்ததில்லை, தலைவலி வந்ததில்லை. இப்போது பெரும் படுக்கையாக உள்ளாயே. என்று மன வேதனையில் பேசி இருக்கிறார்.

Advertisement