அட்லீயை ஹாலிவுட் போக சொன்ன யோகி பாபு – ப்ளூ சட்டை போட்ட பதிவை பாருங்க. இப்பவே ஆரம்பிச்சிட்டாரா ?

0
529
Bluesattai
- Advertisement -

ஜவான் பட விழாவில் அட்லீ குறித்து யோகி பாபு பேசிய விஷயத்தை கலாய்க்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

ஆனால், உண்மையில் ஒரு சில சமயத்தில் நல்ல படங்களுக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்.படங்களை மட்டுமல்லாது அடிக்கடி பல பிரபலங்களை கலாய்த்து பதிவிட்டு வரும் மாறன் தற்போது அட்லீயை கலாய்த்து உள்ளார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம்தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்துஉள்ளனர். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் pre release event நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய யோகி பாபு ‘இயக்குனர் அட்லி தமிழில் எப்படி ஆளுமையோ, அதே போல இந்தியிலும் அவர் ஆளுமை தான்.

-விளம்பரம்-

ஹாலிவுட்டுக்கு செல்லுங்கள், அங்கேயும் ஆளுமை செய்வீர்கள். அட்லி ஹாலிவுட் போனால், அவரோடு நானும் சென்றுவிடுவேன்’ என்று கூறி இருந்தார். இந்த நிலையில் யோகி பாபுவின் இந்த பேச்சை கலாய்க்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் ‘சும்மா இருங்க ப்ரோ. அங்க போனா நான் யாருன்னு கண்டுபுடிச்சிருவாங்க’குறிப்பு: ‘ஒரிஜினல் இயக்குனர்’ அட்லீ என்னைய எப்போதோ ப்ளாக் செய்துவிட்டார்’ என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினி – ப்ளூ சட்டை பஞ்சாயத்து :

தமிழ் சினிமாவின் பல நடிகர்களை பாரபட்சம் பார்க்காமல் வம்பிழுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக ரஜினியை வம்பிழுத்து வருகிறார். அதிலும் அண்ணாத்தா படம் முதல் ரஜினி ரசிகர்களுக்கும் இவருக்கு ட்விட்டரில் பனிப்போர் சென்று கொண்டு இருக்கிறது. சமீபத்தில் ஜெயிலர் படம் வெளியானதில் இருந்து அந்த படத்தையும் விட்டு வைக்காமல் கலாய்த்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement