தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் நடித்த ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.
இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ ,’மஜிலி’போன்ற படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க : என் கணவருக்கு நான் கொடுத்த பிறந்தநாள் பரிசு அவர் மறக்க மாட்டார்.!
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த மஜிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமந்தா தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருந்து வருகின்றார், அவ்வபோது புகைப்படங்களையும் வெளியிடுவார். அந்த வகையில் முதன் முறையாக தன் 6 பேக் உடற்கட்டை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.