ஸ்ரீதேவியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் போட்ட உருக்கமான பதிவு.

0
538
sridevi
- Advertisement -

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி அவரது மகள் ஜான்வி கபூர் மற்றும் கணவர் போனி கபூர் என இருவரும் தங்களுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழி படங்களில் கொடி கட்டி பறந்தவர்.

-விளம்பரம்-

தனது கடைசி காலம் இளமையை மாறாமல் இருந்த ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி படு பிசியாக இருந்து வந்த ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மேலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அவரது மரணம் இயற்கையானது என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

- Advertisement -

தொடரும் மர்மம் :

நடிகை ஸ்ரீ தேவி மரணமடைந்த நாள் முதல் அவர் திட்டமிட்டு தான் கொலை செய்துள்ளனர் என்று தொடர்ந்து தெரிவித்துவருகிறார். சமீபத்தில் இது பற்றி அவர் தெரிவிக்கையில் ” ஸ்ரீதேவி இறப்பிற்கான காரணம் அவர் தண்ணீர் தொட்டியில் மூச்சி திணறி இருந்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது நுரையீரலில் எந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது என்று குறிப்பிடப்படவில்லை.அந்த விவரத்தை கேட்ட போதும் அதனை கூற துபாய் போலீசார் தர மறுத்து விட்டார்கள்” என்று கூறியிருந்தார். இப்படி ஸ்ரீதேவி மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவு தெரியாமல் இருந்தாலும் அவரை பற்றிய நினைவுகள் இன்றும் மறவாமல் தான் இருந்து வருகிறது.

ஸ்ரீதேவி மகள்கள் :

ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இருவருமே பாலிவுட்டில் நடிகைகளாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவருமே ஸ்ரீதேவி அளவிற்கு பிரபலமடைய முடியவில்லை. இதில் ஜான்வி கபூர் ஆவது தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால், குஷி கபூருக்கு பட வாய்ப்புகள் அப்படி அமையவில்லை. இந்த நிலையில் இன்று ஸ்ரீதேவியின் நினைவு தினத்தையொட்டி அவரது குடும்பத்தினர் ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஜாவின் கபூர் இன்ஸ்டா பதிவு :

அந்த வகையில் ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.அந்த பதிவில் “உங்களை நான் இன்னும் எல்லா இடங்களிலும் உன்னைத் தேடுகிறேன் அம்மா, இன்னும் நான் செய்யும் உங்களை பெருமை படைத்தும் வகையில் நான் எல்லாவற்றையும் செய்து வருகிறேன் என்று நம்புகிறேன். நான் எங்கு சென்றாலும், நான் செய்யும் அனைத்து செயல்களும் உங்களிடம் தொடங்கி உங்களிடமே முடிவடைகிறது. என்று பதிவிட்டுள்ளார்.

போனி கபூர் பதிவு :

அதே போல செரிதேவியின் கணவர் போனி கபூரும் “நீ எங்ககளை விட்டு பிரிந்து தற்போது 5 வருடங்களாகிறது. உன்னுடைய அன்பும் நினைவுகளும் எங்களை எப்போதும் முன்னெடுத்துச் செல்லும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது ஷோசியயல் மீடியாவில் வைரலாகி வருகிறது. போனி கபூர் பாலிவுட் தயாரிப்பாளர் ஆவார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement