சமையல் மந்திரம் கிரிஜாவா இது.! எப்படி இருக்காங்க பாருங்க.! வெளியான புகைப்படம்..!

0
4586
Antharangam-girija
- Advertisement -

நான் ஸ்கூல் படிக்கும் போதே தோல் சம்பந்தமான படிப்பு படிக்கணும்னு ஆசை இருந்தது. ஆனால், என்னால அப்போ படிக்க முடியலை. சமையல் மந்திரம் ஷோ பண்ணுனதுக்கு அப்புறம் எனக்கு ஒரு ப்ரேக் கிடைச்சது. இந்த ப்ரேக்கை என் படிப்புக்காக யூஸ் பண்ணிட்டு இருக்கேன். இப்போ மும்பையில தங்கி படிச்சிட்டு இருக்கேன்…’’ எனப் பேச ஆரம்பித்தார், கிரிஜஸ்ரீ.

-விளம்பரம்-

girija

- Advertisement -

எப்போ சென்னைக்கு வந்து சின்னத்திரை, வெள்ளித்திரைனு கலக்கப்போறீங்க..?

“சினிமாவை ஒதுக்கி வைக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லைங்க. சின்னத்திரையோ சினிமாவோ ஒரு நல்ல ரோல் கிடைச்சா நடிக்க நான் ரெடி. என் மனசுக்குச் சரினு படாத எந்த ஒரு விஷயத்தையும் நான் பண்ண மாட்டேன். எனக்கு சரினு படுற எந்த ரோல் கிடைச்சாலும் அதை நான் பண்ணிடுவேன். அப்படித்தான் நான் சமையல் மந்திரம் ஷோ பண்ணினேன். அதுக்கப்பறம் அதே மாதிரி வேற ஒரு ஷோ பண்றதுக்கு வாய்ப்பு வந்தப்போ, அந்த ஷோவோட ஃபார்மெட்டை மாத்தணும்னு அவங்ககிட்ட சொன்னேன். அவங்க டி.ஆர்.பி போயிடும்னு பயந்துக்கிட்டு வேணாம்னு சொல்லிட்டாங்க. அவங்களையும் குறை சொல்ல முடியாது. அதுக்கப்பறம் எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே சமையல் மந்திரம் டைப்பிலேயே இருந்துச்சு. சில படங்களில் க்ளாமர் ரோல் பண்றதுக்கும் கேட்டாங்க. எனக்கு அதில் விருப்பம் இல்லை. அதுனாலதான் படிக்க வந்துட்டேன். நல்ல ரோல் கிடைச்சா உடனே நடிக்க வந்திடுவேன்.’’

-விளம்பரம்-

நீங்க சமையல் மந்திரம் ஷோ பண்ணும் போது நிறைய எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்திருக்கும். அதையும் தாண்டி நீங்க அந்த ஷோ பண்ணுனதுக்கு என்ன காரணம்..?

girija-samayalmanthiram

“நான் பண்றது சரினு தோணுச்சு; அதுதான் காரணமாகவும் இருந்துச்சு. அந்த ஷோ என்னைக்குமே எனக்கு தப்பா தெரியலை. எங்க வீட்டுல இருக்கிறவங்களும் அதைத்தான் சொன்னாங்க. அதுனால அந்த ஷோ பண்ணினேன். டபுள் மீனிங்கா பேசுறதை குறைச்சுக்கிட்டு மக்களுக்கு நிறைய தகவல்கள் சொல்ற மாதிரி அந்த ஷோவை மாத்தணும்கிறது என் ஆசை.’’

இந்தப் பெரிய இடைவெளி உங்க கரியரைப் பாதிக்கும்னு நீங்க நினைக்கலையா..?

“இது பெரிய இடைவெளிதான். ஆனால், இந்த இடைவெளியிலேயும் சோஷியல் மீடியா மூலம் மக்கள்கூட நான் கனெக்ட்லதான் இருக்கேன். நான் சின்னத்திரையில் இருக்கும் போது மக்கள்கிட்ட இருந்த எந்த அளவுக்கு அன்பு வந்துச்சோ, அது இப்போவும் எனக்குக் கிடைச்சுட்டுத்தான் இருக்கு. இந்த இடைவெளி எனக்கு மீடியாவுக்கும் இடையிலதான் இருக்கு; எனக்கு மக்களுக்கும் இடையே இல்லை.’’

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு நீங்க; இப்போ மும்பைக்குப் போயிருக்கீங்க. சென்னையை எவ்வளவு மிஸ் பண்றீங்க..?

“ரொம்ப மிஸ் பண்றேன். சென்னையில பகல்ல சுத்துனதைவிட நைட்ல சுத்துனதுதான் அதிகம். நானும் என் ஃப்ரெண்ட்ஸும் அடிக்கடி நைட் ரவுண்ட்ஸ் போவோம். மும்பையில அப்படி எதுவும் பண்ண முடியலை. நான் இருக்குற இடத்துக்கும் பீச்சுக்கும் 5 கிலோமீட்டர்தான் இருக்கு. ஆனாலும் எனக்கு அங்க போக விருப்பமே இல்லை. சென்னையில இருக்கும்போது எங்க வீட்டுக்கும் பீச்சுக்கும் 15 கிலோமீட்டருக்கு மேல இருக்கும். இருந்தாலும் வாரத்துக்கு ரெண்டு டைம் அங்க போயிடுவேன். அப்புறம் குல்ஃபி வண்டி, மோர் தாத்தானு நிறைய விஷயங்களை மிஸ் பண்றேன். இங்க சோஷியல் மீடியாவும் பிக் பாஸும்தான் ஆறுதலா இருக்கு.’’

samayal-manthiram-girija

பிக் பாஸ் சீசன் 2 எப்படிப் போயிட்டு இருக்கு..?

“சீசன் 2 ல மும்தாஜ், டேனி, யாஷிகானு இந்த மூணு பேருல ஒரு ஆள்தான் வின் பண்ணுவாங்கனு எனக்குத் தோணுச்சு. அதுல டேனி இப்போ எலிமினேட் ஆகிட்டார். யாஷிகாவுக்கு, மஹத் விஷயத்தால் கொஞ்சம் பிரச்னை ஆகிடுச்சு. ஒரு போட்டியாளரா எனக்கு மும்தாஜ் மேடமை ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நேர்மையா இருக்காங்க; ஆனால், அவங்ககிட்ட இருக்கிற குறையை மத்தவங்க சொல்லும் போது அதை ஏத்துக்க மாட்றாங்க. அதை மட்டும் சரி பண்ணிட்டா, மும்தாஜ் வின் பண்ண வாய்ப்பு இருக்கு.’’

Advertisement