மத்தவங்க என்ன நெனப்பாங்க, நரை முடியை மறைக்க சொன்ன தந்தை – சமீரா ரெட்டி கூறிய அட்டகாச பதில்.

0
2410
sameera
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சமீரா ரெட்டி. இவர் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பிறகு 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை சமீரா ரெட்டி திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் முழு கவனமே குடும்பத்தில் செலுத்தி வந்தார். பின் நடிப்பிலிருந்து முழுவதும் குட் பை சொல்லிவிட்டார். தற்போது சமீராவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீரா ரெட்டி அவர்கள் மேக்கப் எதுவும் இல்லாமல் நரைத்த தலையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இதையும் பாருங்க : பிபி ஜோடி பைனல் – முதல் பரிசை வென்றது இவர்கள் தான். இந்த ரெண்டு ஜோடிக்கு இரண்டாம் பரிசு. இதோ புகைப்படம்.

- Advertisement -

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
அப்படி என்ன அந்த பதிவில் அவர் பதிவிட்டு இருக்கிறார் என்று பார்த்தால், நான் ஏன் எனது வெள்ளை முடியை மறைக்க வில்லை என்று என் அப்பா கேட்டார். மக்கள் என்னை கிண்டலடிப்பது குறித்து அவர் மிகவும் கவலை கொண்டிருந்தார். நான் வயதான, அழகில்லாத, அலங்காரம் செய்த பெண்ணாக ஆகிவிடுவேன் என்று அர்த்தமா என்று கேட்டேன். முன்பு போல் நான் அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை. முதலில் வழக்கமாக பிறர் என்னுடைய நரைமுடியை பார்த்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தலை முடிக்கு கருப்பு நிறம் பூசி வந்தேன்.

ஆனால், தற்போது எனக்கு நேரம் கிடைக்கும் போது தான் அதுவும் எனக்கு விருப்பம் இருந்தால் மட்டும் தான் பூசுகிறேன். பழைய நடைமுறைகளை உடைக்கும் போது தான் புதிய மாற்றங்கள் தொடங்குகின்றன. ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன மாற்றங்களின் வழியாக நாம் முன்னேறி சென்று பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறோம். அவை சிறிய அளவில் இருந்தாலும் பெரிய இடங்களுக்கு கொண்டு செல்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement