கணவரின் மரணம், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியது குறித்து சாந்தி வில்லியம்ஸ்

0
325
- Advertisement -

குடும்ப சூழ்நிலைக்கு மதம் மாறினேன் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி, மெட்டிஒலி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் கோயம்புத்தூரில் தான் பிறந்து வளர்ந்தது. ஆனால், இவர் சென்னையில் செட்டில் ஆகி விட்டார். பின் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்தபோது மலையாளத்தில் ‘செம்மீன்’ என்ற படத்தை இயக்கிய ராமு என்பவர் அதே பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் வசித்து வந்து இருந்தார். இவரது சிவப்பான மற்றும் உயரமான உயரத்தைக் கண்டு காட்டு வாசிகள் பற்றிய மலையாள டாக்குமென்ட்ரி படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

1972 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் தான் சாந்தி முதன் முதலில் நடித்தார். அப்போது இவருக்கு 11 வயது. அதோடு இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் கதாநாயகியாக கூட நடித்து இருக்கிறார். மேலும், தமிழில் பல்வேறு படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே இவர் மலையாள சினிமாவின் பிரபலமான கேமராமேனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். பின் ஒரு கட்டத்தில் இவரின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் மனம் உடைந்த சாந்தி தன் நான்கு பிள்ளைகளை வைத்து ரொம்பவே கஷ்டப்பட்டார். மேலும், இவர் 18 வருஷத்துக்குப் பிறகு 1990-ம் வருஷம் தான் நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுத்த்தார். சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் முல்லையின் அம்மா கதாபாத்திரத்தில் சாந்தி நடித்திருந்தார். இந்த முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

சாந்தி வில்லியம்ஸ் பேட்டி:

இதற்கடுத்தும் இவர் சீரியலில் நடித்து நடித்த வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சாந்தி வில்லியம்ஸ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், மதத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நான் என் கணவரை இழந்து பிள்ளைகளை வைத்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். ஒரு பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுக்க முடியாத அளவிற்கு ரொம்ப சிரமப்பட்டேன். அப்போது மதம் மாற சொன்னார்கள். மதம் மாறினால் தான் பிள்ளைகளுக்கு படிப்பு, வீட்டு வாடகை போன்ற செலவுகளுக்கு எல்லாம் பணம் கிடைக்கும் என்றார்கள்.

மதம் மாறிய காரணம்:

அதற்காக நான் மதமும் மாறினேன். நான் கிறிஸ்டியனாக மாறினதற்கு காரணம் குடும்ப சூழ்நிலை தான். எப்படியாவது என் பிள்ளைகள் படித்தால் போதும் என்று நான் மாறினேன். ஆனால், என்னுடைய குடும்பம் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பயங்கரமாக கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள். என்னால் முழுமையாக கிறிஸ்டியனாக மாற முடியவில்லை. இது குறித்து பாதரிடம் சொல்லும்போது, நீ மதம் மாறினால் போதும் தினமும் உன் வீட்டில் சாமி படங்களை வைத்து கூட கும்பிட்டு, வெளியில் சொல்லாதே என்று சொன்னார். இப்படி எல்லாம் பலபேர் ஏழைகளின் வறுமையை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று வேதனையுடன் கூறி இருந்தார்.

Advertisement