நானும் அந்த படத்துக்கு காசு கொடுத்தேன் – விஷாலை தொடர்ந்து பரபரப்பை கிளப்பிய சமுத்திரகனி.

0
2031
- Advertisement -

விஷாலை தொடர்ந்து சமுத்திரகனியும் தன் படத்திற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.தற்போது விஷால் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் மார்க் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். டைம் டிராவல் கான்செப்டில் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

மார்க் ஆண்டனி படம்:

இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் வெளியிட பாலிவுட்டில் உள்ள தணிக்கை குழுவுக்கு 6.5 லட்சம் ரூபாய்யை லஞ்சம் கொடுத்ததாக விஷால் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர், கடந்த ஆரம் வெளியான என்னுடைய மார்க் ஆண்டனி படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெறுவதற்கு மும்பையில் இருக்கும் திரைப்பட சான்றிதழ் அலுவலகத்திற்கு படத்தை அனுப்பி இருந்தேன்.

லஞ்சம் கொடுத்த விஷால்:

ஆனால், அவர்கள் 6.5 லட்சம் கொடுங்கள். அதற்கு பின் தான் படத்தை வெளியிட முடியும் என்று சொன்னார்கள். அதன்படி நான் படத்தின் திரையிடலுக்கு மூன்று லட்சமும், சான்றிதழுக்கு 3.5 லட்சம் என்று இரண்டு தவணைகளாக கொடுத்திருக்கிறேன். அதற்கு பிறகு தான் மார்க் ஆண்டனி படம் இந்தியில் வெளியானது. இதுபோன்ற மோசமான சம்பவத்தை என்னுடைய வாழ்நாளில் இதுவரை நான் கண்டதே இல்லை. இது தொடர்பான விவரங்களை கொடுத்திருக்கிறேன்.

-விளம்பரம்-

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கருத்து:

இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். இனி எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் இந்த நிலைமை வந்துவிடக்கூடாது. யாரும் இனி இது போல் நடக்கக்கூடாது என்று பேசி இருக்கிறார். இதை அடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இது தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக கூறி இருந்தார்கள். இந்த நிலையில் நடிகர் சமுத்திரகனி தன்னுடைய படத்திற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமுத்திரக்கனி அளித்த பேட்டி:

பேட்டியில் அவர், 2016ல் என்னுடைய அப்பா படத்திற்கு வரி விலக்கு வாங்க நான் பணம் கொடுத்தேன். நியாயமாக பார்த்தல் அப்பா மாதிரி திரைப்படத்தை அரசுதான் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஷ்டப்பட்டு படத்தை நானே தயாரித்து இயக்கி நடித்திருந்தேன். அதற்கு வரி விலக்கு சான்றிதழ் வாங்கும் போது பணம் கொடுத்து தான் அந்த சான்றிதழை வாங்க வேண்டி இருந்தது. அது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது என்று பேசி இருக்கிறார்.

Advertisement