லியோ Badass பாடல் வெளியானதை தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளான அனிருத். இதான் காரணம்.

0
3558
- Advertisement -

லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானதை தொடர்ந்து அனிரூத்தை விமர்சிக்கும் மீம்ஸ் தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிரூத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் அஜித், விஜய், கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட், டாக்டர், டான், விக்ரம் போன்ற பல படங்களில் அனிரூத் இசை அமைத்து இருக்கிறார்.

- Advertisement -

அனிரூத் திரைப்பயணம்;

சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்து இருந்தார். பின் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த ஜெயிலர் படத்துக்கும் அனிருத் தான் இசை அமைப்பாளர். சும்மா பாடல்கள் எல்லாம் வெறித்தனமாக இருந்தது. தற்போது அனிரூத் அவர்கள் சியான் 60, இந்தியன் 2, தலைவர் 169 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படத்திற்கும் அனிரூத் தான் இசையமைப்பாளர்.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் ஆடியோ விழா செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

-விளம்பரம்-

Badass பாடல்;

பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் `லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த படத்தின் இரண்டாம் பாடல் “Badass” வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை கேட்ட பலரும் கேலி செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடலான நான் ரெடி தான் பாடல் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டாம் பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்கப்படவில்லை.

அனிரூத் குறித்த விமர்சனம்:

இந்த நிலையில் அனிரூத்தின் பாடல் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில், சமீப காலமாகவே உங்களுடைய பாடல்களும் குரலும் தான் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நீங்களே பாடி கொண்டிருந்தால் உங்கள் குரலை கேட்க முடியவில்லை. மற்ற பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். எங்க பார்த்தாலும் உங்களுடைய வாய்ஸ் தான் கேக்குது. இவ்வளவு சுயநலமாக இருக்காதீர்கள். உங்களுடைய வாய்ஸை கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. உங்களுடைய இசையில் மற்றவர்கள் பாடினால் நன்றாக இருக்கும் என்று பலரும் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement