‘நானும் எதுவும் சொல்லக்கூடாதுனு தான் பாத்தேன்’ – தன்னை demon என்று அழைத்த பாலாஜிக்கு பதிலடி கொடுத்த சனம். வெளியிட்ட வீடியோ ஆதாரம் இதோ.

0
411
sanam
- Advertisement -

தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நான்காம் வாரம் தொடங்கி உள்ளது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-15-853x1024.jpg

மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆனவர்கள்:

அதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். பின் இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர்.

நிகழ்ச்சிக்கு சிம்பு என்ட்ரி:

அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி இருந்தார். இதுகுறித்து தெரிவித்த அவர், நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார். பின் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு தாமாகவே வெளியேறினார். தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு வரப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

சனமை Demon என்று சொல்லிய பாலாஜி:

இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் பேசியது பொய்யென்று சனம் செட்டி வெளியிட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் Angel மற்றும் Demon என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான Angel மற்றும் Demon யார்? என சொல்லவேண்டும். அதில் பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டியை தான் Demon எனக் கூறினார். ஆனால், பாலாஜி முருகதாஸ் சொல்லும்போது பெயர் மியூட் செய்யப்பட்டாலும் அவர் சொன்ன விஷயம் எல்லாமே சனம் செட்டி பற்றி தான் பேசி இருந்தார் என தெளிவாக தெரிந்தது. அதில் அவர், நான் அந்த வார்த்தையை சொல்லவே இல்லை.

பதிலடி கொடுத்த சனம் செட்டி:

ஆனால், என்னை பற்றி தவறாக பேசி என் பெயரை கெடுத்துவிட்டார். ஒருவரது கேரியரை அழித்து அதன் மூலமாக மேலே செல்ல நினைக்கிறார். அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்காதா? என்று பாலாஜி கேட்டிருந்தார். இது பிக் பாஸ் முந்தைய காலங்களில் நடந்த சம்பவம் பற்றி பாலாஜி அல்டிமேட் நிகழ்ச்சியில் பேசியது. இதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு பற்றி சனம் செட்டி ட்விட்டரில் வீடியோ உடன் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், ஆதரவுக்கு நன்றி, சில போட்டியாளர்கள் என் மீது சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு பல அழைப்புகள் வந்து விட்டது. அவர்களது கேம் பாதிக்கக் கூடாது என சொல்லி நான் இதுவரை எந்த ரியாக்சனும் கொடுக்கவில்லை. ஆனால், இன்று என் நேர்மையே கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன நடந்தது என்பதற்கு பாலாஜி சொன்னதை அருகிலிருந்த கேட்ட ஆரி சாட்சிக்கு இருக்கிறார் என்று சனம் கூறி இருக்கிறார்.

Advertisement