சுஷாந்த் மரணம் குறித்த வீடியோகால் விவாதத்தில் மேக் செய்த நிக்கி கல்ராணியின் சகோதரி. வீடீயோவை பகிர்ந்து கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்.

0
30195
sanjana
- Advertisement -

கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மர்டர் திரைப்படத்தின் கன்னட ரீ மேக்கில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல மடைந்தார்.தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது “இளைய தளபதி ” என்ற தொடரில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீரியலை ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவரை இவர் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். Fastrackகிற்காக ஜான் ஆபிரகாமுடன் இவர் நடித்த விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் லைவ் விவாதம் ஒன்றில் செய்த செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

- Advertisement -

சமீபத்தில் பிரபல இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு பல்வேறு நடிகர் நடிகைகளும் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்தை தெரிவித்தனர். ஆனால், சுஷாந்த் சிங் இறந்ததற்க்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் மறைவு குறித்து பிரபல தொலைக்காட்சியில் விவாதிகப்பட்டது. மற்றவர்கள் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது நடிகை சஞ்சனா கல்ராணி லைவ் என்று தெரிந்தும் தனது கேமராவை பார்த்து மேக்கப் போட்டார். ஒருவரின் மரணம் குறித்து பேசி கொண்டு இருக்கும் போது மேக்கப் செய்த சஞ்சனா கல்ராணியை பலரும் வறுத்தெடுத்து வந்தனர்.

-விளம்பரம்-

மேலும், அந்த குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்த அ ஆ பட நடிகை மீரா சோப்ரா (நிலா) அசிங்கம் என்று கமன்ட் செய்துள்ளார். ஆனால், இது குறித்து விளக்கமளித்துள்ள சஞ்சனா கல்ராணி, இது ஒரு சிறிய குழப்பத்தால் நேர்ந்தது. நான் லைவில் இருக்கிறேன் என்று நான் நினைக்கவில்லை. தொகுப்பாளரும் என் பெயரை அழைத்தது எனக்கு கேட்கவில்லை. மிகவும் உணர்ச்சிகரமான விசயத்தில் என்னை சிக்க வைக்காதீர்கள். இத்தோடு நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement