இனி நான் இப்படி நடிக்க மாட்டேன் ! சந்தானம் எடுத்த அதிரடி முடிவு ! காரணம் இதுதான்

0
4394
Santhanam-Actor
- Advertisement -

சந்தானம் நடித்து சிம்பு இசையமைத்துள்ள சக்க போடு போடுராஜா திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சந்தானம் கோயமுத்தூரில் கொடுத்த பெட்டியில் அவரது அடுத்த திட்டம் உள்ளிட்ட பலவற்றை கூறினார்.
santhanamதற்போது வரை காமெடியனாக 120 படங்களில் நடித்து விட்டேன். அதனை தாண்டி தற்போது ஒரு தயாரிப்பாளராவும், ஹீரோவாகவும் மாறி இருக்கிறேன். இதற்கெல்லாம் என் கடின உழைப்பே காரணம்.

என்னை திரைத்துறையில் பல்வேறு தளங்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, காமெடியனாக, ஹீரோவாக, ஒரு தயாரிப்பாளராக நிருபித்து விட்டேன். இதனால் இனி காமெடியனாக நடிக்க போவவில்லை என முடிவு செய்துள்ளேன்.

அதனுடன் சேர்த்து என்னை ஒரு இயக்குனராக நிரூபிக்க தயாராகி வருகிறேன். நான் இயக்க போகும் இந்த முதல் படம் இரு சூப்பர் ஹீரோ சப்ஜெட் ஆகும். ஆனால், இந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை. ஒரு பிரபல ஹீரோவை வைத்து இயக்கவுள்ளேன். எனக் கூறினார் சந்தானம். சக்க போடு போடுராஜா படத்தை தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் வரும் பிப்ரவரியில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement