சரத்பாபுக்கு ஏற்பட்ட செப்சிஸ் பாதிப்பு – அப்படி என்றால் என்ன ? ஏன், யாருக்கு? மருத்துவ விளக்கம்

0
306
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சரத்பாபு. இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் படங்களில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற பல வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் சின்னத்திரை சீரியல் நடித்தார். இப்படி இவர் கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேலாக 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சரத்பாபுவின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. இவருடைய சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என உடல் உறுப்புகள் நோய் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

செப்சிஸ் நோய் எதை பாதிக்கும் :

இதனால் இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் தான் இவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இதனால் திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலருமே இவர் கூடிய விரைவில் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடும்

இந்நிலையில் நடிகர் சரத் பாபுக்கு ஏற்பட்ட செப்சிஸ் நோய் தொற்று குறித்து மருத்துவர் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, செப்சிஸ் என்பது மனித உடலில் ஏற்படும் ஒரு தொற்று. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடும். இந்த தொற்று என்பது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றால் ஏற்படும். உடலில் ஏற்படக்கூடிய தொற்றினுடைய வீரியம் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதை அழித்துவிடும். இதற்கு பெரிதாக மருந்து தேவைப்படுவது கிடையாது.

-விளம்பரம்-

அறிகுறிகள் என்ன :

சரியான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே இந்த தொற்று அழிந்து விடும். இந்த தொற்றானது ரத்தத்தில் கலந்தாலுமே கூட உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி தொற்றினுடைய வீரியத்தை அழித்து விடும். அதே நேரம் தொற்றின் உடைய வீரியம் அதிகமாக இருந்தால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அந்த தொற்று அழித்து விடும். இதனால் காய்ச்சல் போன்ற சில அறிகுறிகள் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் எந்த உறுப்பில் தொற்றி ஏற்பட்டு இருக்கிறதோ அந்த உறுப்பில் நிறைய மாறுபாடுகள் இருக்கும்.

செப்சிஸ் நோயால் ஏற்படும் பாதிப்பு :

நுரையீரலில் தொற்று ஏற்பட்டால் இருமல், சளி, வாந்தி ஆகியவை இருக்கும். இதனால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றுநோய் வீரியத்தையோ தொற்றையோ அழிக்க முடியாமல் போய்விட்டால் உடல் உறுப்புகள் பாதிப்படையும். இதனால் பல உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோயாளியுடைய நினைவு இழக்க நேரிடும். மேலும், ஒரு உறுப்பு பாதிப்படைந்தாலே மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். இதுதான் செப்சிஸ்.

தொற்றினுடைய வீரியம் உயிருக்கு ஆபத்தானது. இந்த தொற்றானது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை கொடுப்பார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக குறையும். இந்த நேரத்தில்தான் தொற்றுகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் 70, 80 வயதானவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகிவிடும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கெல்லாம் இந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

Advertisement