ஹிதேந்திரன், சிறுமி அபிராமி இப்பூவுலகை விட்டு நீங்கினாலும் – சென்னையில் ஒரு நாள் நிஜ நாயகனை சந்தித்த சரத் குமார்

0
1571
Sarathkumar
- Advertisement -

சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தின் உண்மை நாயகனை சந்தித்தது குறித்து நடிகர் சரத்குமார் பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வாரிசு. இந்த படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் வாரி இறைத்திருந்தது.

- Advertisement -

சரத்குமார் திரைப்பயணம்:

இதனை அடுத்து நடிகர் சரத்குமார் அவர்கள் சமீபத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் 2 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் உலக அளவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

சென்னையில் ஒரு நாள் படம்:

இந்நிலையில் நடிகர் சரத்குமார் அவர்கள் சென்னையில் ஒரு நாள் படத்தின் நாயகனை சந்தித்து இருப்பது குறித்து போட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ஷாகித் காதர் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் சென்னையில் ஒரு நாள். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா, பார்வதி மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக எடுத்த கதை.

-விளம்பரம்-

உண்மை சம்பவம் கதை:

அதாவது, 2008 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 15 வயது ஹிதேந்திரன் என்ற சிறுவன் விபத்தில் மூளைசாவு அடைந்து விட்டார். அவருடைய இதயத்தை அப்போது கூடுதல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உதவியுடன் தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து ஜெ.ஜெ.நகருக்குடிராபிக் 75 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை 15 நிமிடங்களில் கடந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியவர் திரு.மோகன். தற்போது மோகன் நீலாங்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் பதிவிட்ட வீடியோ:

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் அவர்கள் சென்னையில் ஒரு நாள் படத்தின் நாயகன் மோகனை சந்தித்திருக்கிறார். இது தொடர்பாக தான் அவர், சென்னையில் ஒரு நாள் திரைப்படம் வெளிவர காரணமான ஒரு உண்மை சம்பவத்தின் நாயகன் திரு மோகன் அவர்களை நேற்று நான் என்னுடைய thorஐ அழைத்துக் கொண்டு நடைபயிற்சி சென்றபோது நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நன்றி கூறி அவருடன் பேசி இருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

Advertisement