மஞ்சுமேல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மஞ்சுமேல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சுமேல் பாய்ஸ் படம் எனக்கு எரிச்சலை ஊட்டுகிறது. அதில் காட்டுவது புனைவு கிடையாது. தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது. குடி குடி குடி என்று விழுந்து கிடப்பது, அத்துமீறுவது தவிர வேறு எதிலும் ஆர்வமில்லை.
எந்த பொது நாகரிகமும் கிடையாது. இந்த மலையாள பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது. ஆனால், அவர்கள் மொழி மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று தெனாவெட்டு இருக்கும். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகள் கால் அழுகி இருக்கின்றது. இப்படத்தினை கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள் என்றெல்லாம் படத்தை விமர்சித்தும், மலையாள மொழி மக்களை விமர்சித்தும் பேசியிருந்தார்.
எழுத்தாளர் ராஜகம்பீரன் கருத்து:
இது மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக எழுத்தாளர் ராஜகம்பீரன் கூறியிருப்பது, ஜெயமோகனின் எழுத்தில் வெளியான பல படங்கள் குப்பை படங்கள் தான். இவர் எப்போதும் தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள தான் இது போன்ற சர்ச்சைகளை அடிக்கடி கிளப்பிக் கொண்டே இருக்கிறார். சாமானிய மக்களிடம் தான் இவர் தன்னுடைய கோபத்தை காட்டுவார்.
ஜெயமோகன் குறித்து சொன்னது:
மாவு கடைக்காரரிடம் சென்று புளிச்ச மாவு கொடுத்ததற்கு சண்டை போட அவன் கொடுத்த அடியில் மாவு கட்டு போட்டு மருத்துவமனைக்கு சென்றது இவர் தான். பணக்காரர்களின் அடிமையாளராகவே இவர் இருக்கிறார். பொன்னியின் செல்வன் கதையை கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார். உடனே மணிரத்தினம் இயக்கத்தில் அந்த படம் உருவாக இருக்கிறது என்றும், தன்னை அழைத்திருக்கிறார் என்றும் சொன்னவுடனே அவர் போட்ட போஸ்ட்கள் எல்லாம் டெலீட் செய்து விட்டார்.
மஞ்சுமேல் பாய்ஸ் படம்:
இப்போது மஞ்சுமேல் பாய்ஸ் படம் பற்றி எல்லாம் இவருக்கு கவலை கிடையாது. அந்த படத்திற்கு அவரை அழைக்கவில்லை என்றும் தமிழ்நாட்டிற்கு வந்து படக் குழுவினர் அவரை சந்திக்காத வயிற்று எரிச்சலில் இப்படி அவர் ஏகப்பட்ட விமர்சனங்களை அடுக்கி வருகிறார் என்று கூறியிருக்கிறார். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது.