சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் பட்ஜட் இத்தனை கோடியா.!

0
2882
saravana-stores-annachi

கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் விளம்பரம் மற்றும் மீடியாக்களின் கண்களில் அதிகம் தென்படுகிறார். தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடித்து அசத்தினார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை காலாய்த்து தள்ளினாலும், அவர் அசராமல் ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் நடித்து ‘பெஸ்ட்டு பெஸ்ட்டு’ என தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார்.

Image result for saravana stores annachi

இதன் உச்சகட்டமாக , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு இவரும் அழைக்கப்பட்டிருந்தர். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பக்கத்தில் அமர்ந்தவாறு போட்டோக்கள் பரவியது. விஷயம் என்னவென்றால், அந்த கலைநிகழ்ச்சிக்கு 2 கோடி ரூபாய் ஸ்பான்சர் செய்துள்ளார் அருள்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.! நேராக எங்கு சென்றார் தெரியுமா ?

- Advertisement -

அடுத்தகட்டமாக படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் அருள். துணை இயக்குனர் ஒருவர் அவரை அணுகி ஒரு கதையை கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், சரவணா ஸ்டோர்ஸ் விளமபரப் படங்கள் எடுத்த ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோர் தற்போது சரவணாவை ஹீரோவாக ஒரு பாடம் இயக்கவுள்ளனர்.

மேலும், ஹீரோயினாக நயன்தாராவை பேசலாம் என உள்ளார்களாம். இதனை கேட்ட நெட்டிசன்கள் மீண்டும் அருளை கலாய்க்க துவங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தினை 30 கோடி ருபாய் பட்ஜட்டில் தயாராக இருக்கிறது என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement