பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.! நேராக எங்கு சென்றார் தெரியுமா ?

0
15031
kavin
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் கவின். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிகராகவும், சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for kavin mom

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது சரவணன் மீனாட்சி வேட்டையன் கதாபாத்திரம் தான். மேலும், கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தது. ஆனால், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதையும் பாருங்க : முகென் கூட இல்லையாம் அபிராமிக்கு இவர் தான் இறுதி போட்டிக்கு வர வேண்டுமாம்.!

- Advertisement -

பிக் பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின் முதலில் தனது தாயின் நிலைமையை அறிந்து நேராக தனது தாயையும் அவரது உறவினர்களையும் பார்த்துள்ளார் என்று செய்துகள் வெளியாகியுள்ளது.

Image result for kavin mom

இனி வரும் நாட்களில் கவின் கண்டிப்பாக துணிச்சலுடன் இருப்பார் என்று கூறப்படுகிறது. கவினின் தாயார் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தனது குடுபத்தினரின் கடனை அடைத்து தனது தாயை காப்பற்ற தான் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்தார். தற்போது அது நிறைவேறி இருப்பது அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement