தெரியின் வாழ்நாள் சாதனையை வெறும் நான்கே நாளில் முறியடித்த சர்கார்..!

0
1574
theri
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.இருப்பினும் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது வரும் சர்கார் திரைப்படம் விஜய்யின் தெறி திரைப்படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளது.

-விளம்பரம்-

Therivijay

- Advertisement -

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் சர்கார் திரைப்படம் போன்றே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தெறி திரைப்படமும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

இந்நிலையில் சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியிலும் நான்கு நாளில் புதிய சாதனையை செய்துள்ளது.அதாவது உலகளவில் இந்த திரைப்படம் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்து தெரியின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளது.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாமல் 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் மட்டும் 4 நாளில் 6.9 கோடி ரூபாய் வசூல் செய்து இதுவரை எந்த ஒரு படமும் செய்திராத சாதனையை செய்துள்ளது.ஏற்கனவே, வெளியான முதல் நாளில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement