சர்கார் படத்தில் விஜய் முதல்வராக நடிக்க இதுதான் காரணமா..? கசிந்த தகவல்.!

0
235
Sarkar

நடிகர் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய்யின் ரோல் என்னவென்றும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

sarkar vijay

இந்த படம் ஒரு அரசியல் சம்மந்தபட்ட கதைக்களத்தை கொண்ட ஒரு படம் என்று ஏற்கனவே வந்த பல்வேறு தகவல்கள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. அதிலும் இந்த படத்தில் நடிகர் விஜய் முதல்வராக நடித்துள்ளார் என்ற ஒரு ஹாட் தகவலும் தற்போது தீயாக பரவி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து வருகிறாராம். வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருந்து வரும் விஜய் தமிழ் நாட்டில் நடக்கும் தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறார். அவர் சொந்த ஊருக்கு செல்வதற்கு தாமதமானதால் அவருடைய வாக்கினை சில அரசியல் கட்சியினர் கள்ள ஒட்டாக பதிவிட்டிருப்பது விஜய்க்கு தெரியவருகிறது,

vijay-sarkar

இதனை என்னவென்று விசாரிக்கும் போது அரசியல் கட்சியினருக்கும், நடிகர் விஜய்க்கும் பிரச்சனை ஏற்பட, அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய். பின்னர் அரசியலில் குதித்து முதல்வராகி விடுகிறாரார் நடிகர் விஜய். இந்த படத்தில் அரசியல்வாதியாக ராதாரவி நடிக்கிறார். அவரை எதிர்த்துதான் நடிகர் விஜய் அரசியலில் பல்வேறு புரட்சிகளையும் செய்கிறார். ஆனால், ராதாரவியை விட இந்த படத்தில் மெயின் வில்லனும் இருக்கிறார். அவர் யார் என்பது தான் சஸ்பென்சாகவே இருந்து வருகிறது.