விஸ்வாசமும் இல்லை பேட்டையும் இல்லை.! பொங்கலுக்கு சர்கார் தான்.! பிரபல திரையரங்கம் அதிரடி.!

0
1171
sarkar-vs-petta

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படமும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இரண்டு தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிரிபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு படத்தையும் தவிர்த்துவிட்டு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தை திரையிட உள்ளனர் ஒரு பிரபல திரையரங்கம். சர்கார் படம் சர்ச்சைகளுக்கிடையே சலசலப்புடன் பல சாதனைகளை செய்துவிட்டது. உலகின் பல நாடுகளில் வெளியான இப்படம் ரூ 250 கோடிகளை தாண்டி வசூலை ஈட்டியது.

- Advertisement -

விஜய் ரசிகர்கள் இதனை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். இந்நிலையில் இந்த படம் வெற்றிகரமாக 75 வது நாளை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மதுரையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் சர்கார் திரைப்படத்தை பொங்கலுக்கு திரையிட உள்ளனர்.

விஸ்வாசம், பேட்ட ஆகிய படங்களின் வருகைக்கிடையே இப்படியான இரு ஏற்பாடு விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் முதல் நாள் ஷோ போல கொண்டாட திட்டமிட்டுள்ளார்களாம்.

-விளம்பரம்-

Advertisement