சேது படத்திலேயே அமீர் மற்றும் சசிகுமாரை மாணவர்களாக நடிக்க வைத்துள்ள பாலா – அதுவும் எந்த காட்சியில் பாருங்க.

0
718
Sethu
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனராகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is sasi.jpg

இந்த படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்திருந்தார்கள். அதோடு இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது. மேலும், நட்பு காதல் மற்றும் துரோகம் போன்றவற்றை மையமாக எடுக்கப்பட்ட படம்.

- Advertisement -

இயக்குனர் To நடிகர் :

அதன் பின்னர் சசிகுமார் ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் இவர் இயக்குவதை விட்டு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படங்கள் அனைத்தும் பெரும் தோல்வியை சந்தித்தது. தற்போது நடிகராக ஜொலித்து வரும் சசி குமார் முதன் முதலில் நடிகராக நடித்தது பாலா படத்தில் தான்.

சேது படத்தில் சசி குமார்

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சேது. இந்த படத்தில் விக்ரம், அபிதா, சிவக்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கண்டது. விக்ரம் அவர்களின் திரை உலக பயணத்தில் இந்த சேது படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பாலாவின் உதவி இயக்குனர்கள் :

இந்த படத்தில் நடிகர் சசி குமார் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சேது படத்தின் ஒரு காட்சியில் ‘சியான்’ பெயருக்கு அர்த்தம் என்ன என்று அந்த கல்லூரியில் உள்ள அனைவரும் ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள் அப்போது ஆசிரியர் ஒருவரிடம் ஒரு மாணவன் சீயானுக்கு அர்த்தம் என்ன என்று சந்தேகம் கேட்பார். அந்த மாணவனாக நடித்தது சசி குமார் தான்.சசி குமார் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் அமீர் கூட சேது படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசி குமார் இயக்கும் படம் :

காரணம் இயக்குனர் அமீர், பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சசி குமார் தற்போது மட்டுமே வச்ச சிங்கம்டா, .பரமகுரு போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் குற்றப்பரம்பரை என்ற நாவலை சசிகுமார் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement