கபாலி, விவேகம், ஸ்பைடர் என ஹிட் படங்களை வாங்கி குவிக்கும் தொலைக்காட்சி

0
1222
thala

கடந்த ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் கபாலி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரிதியாக சாதனை படைத்தது. அந்த படத்தின் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை பல கோடிகளுக்கு சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. அதே போல தல அஜித் நடித்த விவேகம் படமும் பல கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அந்த படத்தின் சேட்டிலைட் உரிமமும் சன் தொலைக்காட்சியின் கைவசம் உள்ளது.

vivegam-ajithகத்தி படத்திற்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தெலுங்கின் முன்னணி ஹீரோவான மகேஷ் பாபு நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ஸ்பைடர். இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தையும் சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சன் தொலைக்காட்சி மீண்டும் விஸ்வரூபம் எடுத்து புது படங்களை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளதால் இனி புது படங்கள் என்றாலே சன் டிவி தான் என்ற பெயர் வந்துவிடும் போல் உள்ளது.

Advertisement