அடடே, நம்ம சத்யா சீரியல் ஆயிஷாவுக்கு திருமணம் முடிந்ததா! அவரே சொன்ன தகவல்- ஷாக்கில் ரசிகர்கள்

0
849
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகை ஆயிஷாவிற்கு திருமணம் முடிந்தது என்ற சர்ச்சைக்கு அவர் கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும், கொரானா தொடங்கிய காலத்திலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும், சில தொடர்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்று தான் சத்யா சீரியல். இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர்.

- Advertisement -

சத்யா சீரியல்:

மேலும், ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிந்துரா பிந்து’ என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் தான் சத்யா சீரியல். இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக கொண்டது தான் சத்யா சீரியல். இந்த தொடர் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆயிஷாவின் சின்னத்திரை பயணம்:

தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்து வருபவர் நடிகை ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆயிஷா நடித்த சீரியல்கள்:

அதன் பின்பு மாயா என்ற சீரியலில் நடித்தார். அந்த தொடர் மூலம் இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து இருந்தது. ஆனால், அந்த சீரியல் சீக்கிரமாகவே முடிவுக்கு வந்தது. அதன் பின்பு தான் ஆயிஷா அவர்கள் சத்யா என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழி சீரியலில் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை ஆயிஷாவின் துணிச்சலான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

ஆயிஷா திருமணம் குறித்த சர்ச்சை:

இது ஒரு பக்கம் இருக்க, ஆயிஷா எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அந்த வகையில் சில தினங்களாகவே ஆயிஷா வெளியிடும் போட்டோக்களில் அவருடைய நெற்றியில் குங்குமம் வைத்து இருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பியும், திருமண வாழ்த்து கூறியும் வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து ஆயிஷா கூறியது, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது ஒரு போட்டோ சூட் தான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement