ஜாடா முடி, அகோரி வேடம் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இது தானா ? வெளியானது சிரஞ்சீவியின் “சயீரா நரசிம்ம ரெட்டி” பர்ஸ்ட் லுக்..!

0
351

தமிழில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடைகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கிலும் கால் பதித்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்னும் வரலாற்றுப் படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் பாகுபலிக்கு பிறகு டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படுகிறது.

Vijaysethupathi

இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ’ சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வரும் நிலையில் தற்போது ஜார்ஜியாவில் நடந்துவரும் படப்பிடிப்பில், விஜய்சேதுபதியும் கிச்சா சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர்.

இவர்கள் இருவரும், அவர்களது கெட்டப்பிலிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. சிரஞ்சீவி – நயன்தாரா திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வைரலானது.

Saira

ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய்சேதுபதி, தமிழ் பேசி நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகிவருகிறது. படம் அடுத்த வருடம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.