திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின் ஐட்டம் பாடலில் ஆட்டம் – சயீஷாவின் நேர்மையான பதில்.

0
622
sayyeshaa
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இப்படத்திற்கு பிறகு கார்த்தி நடித்த “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்திருந்தார் இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதனை விஜய் சேதுபதி நடித்த “ஜூங்கா” படத்தில் நடித்தார். இந்நிலையில் மீண்டும் நடிகர் ஆரிவுடன் இணைந்த சாய்ஷா கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

கஜினிகாந்த் தெலுங்குப் படமான பலே பலே மகடிவோயின் ரீமேக்காகும். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக குச்சிப்புடி நடனக் கலைஞராக நடித்திருந்தார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா.

- Advertisement -

குடும்பம் :

இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் நடிகை சயீஷாவிற்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், கர்ப்பமாக இருப்பதை படு ரகசியமாக காத்து வந்து குழந்தை பிறந்த பின்னரே அறிவித்தனர் ஆர்யா – சயீஷா தம்பதி. அதற்கு பிறகு சமீபத்தில் தான் தங்களுடைய மகளுக்கு ஆரியானா என்று பெயர் வைத்தனர்.

பத்து தல :

இந்நிலையில் ஆர்யாவின் மனைவி சாய்ஷா கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான “யுவரத்னா” என்ற கன்னட படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு படத்தில் நடிக்காமல் இருந்த சாய்ஷா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சிம்பு நடித்துள்ள “பத்து தல” படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க உள்ளார். பத்து தல படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர், அனு சித்ரா என ஓர் நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

-விளம்பரம்-

அடாவடி பாடல் :

இப்படியொரு நிலையில் “பத்து தல” படத்தில் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இப்படமானது வரும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் “பத்து தல” படத்தில் வரும் “அடாவடி” பாடலில் நடிகை சாய்ஷா கவர்ச்சியான நடனம் ஆடியிருக்கிறார். ஆனால் 2 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் சமயத்தில் இது தேவையா என நெட்சன்கள் பதிவிட்டு வரும் நிலையில் தான் அதற்கு பதிலளிக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றிய இட்டுள்ளார் நடிகை சாய்ஷா.

வைரல் பதிவு :

அந்த பதிவில் “நான் மீண்டும் வந்து விட்டேன் எனக்கு மிகவும் பிடித்ததை செய்வதர்க்கு, அது நடனம் தான். பத்து தல படத்தில் உள்ள இந்த அற்புதமான பாடலை ஏ.ஆர்.ரகுமான் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார். “பத்து தல” படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, இப்படம் உங்களுக்கு பிடிக்கும் ஏற்று நம்புகிறேன் என பதிவிட்டு அதனுடன் “அடாவடி” பாடலின் போஸ்டரையும் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி லைக்குகள் குவிந்து வருகிறது.

Advertisement