சினிமாவில் வில்லன் நடிகராக தனது திரைவாழ்க்கையை ஆரம்பித்து இன்று உலக மக்கள் அனைவரிடத்திலும் சூப்பர்ஸ்ட்டர் என்ற அங்கீகாரத்துடன் இருப்பவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம்முழுவதும் பலராலும் அறியப்படும் ரஜினிகாந்த் திரைப்படத்தில் அதிகமாக பயன்படுத்தும் பாபா முத்திரையை தவிர்த்து பெருவிரலையும் ஆல்காட்டி விரலையும் ஒன்றாக வைத்து ஒரு முத்ராவை எப்போதும் அவர் பயன்படுத்திக்கிறார். ரஜினிகாந்தின் இந்த செயலானது தற்போது சமூக வலைதங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
திரைப்பட வாழ்க்கை :
கர்நாடக மாநிலத்தின் மைசூரில் 1950ல் பிறந்த இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 1975ல் கமல்ஹசன் நடித்த அப்பூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறர். தொடக்கத்தில் வில்லனாகவும் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துவந்த ரஜினி கமலுடன் கூட்டணி வைத்து பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “16 வயதினிலே” என்ற திரைப்படத்தில் கமலுடன் சேர்ந்து நடிக்கிறார். இத்திரைப்படமானது நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக இருந்தது. இப்படத்தில் “சப்பாணி” என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹசனுடன் “பரட்டை” என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த் சப்பானியை கலாப்பது போன்றவை ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருந்தது.
மனஅழுத்தம் :
தொடர்ந்து கமலுடனும், பல திரைப்படங்களிலும் நடித்த ரஜினிகாந்த் 1978ல் இயக்குனர் பாஸ்கர் இயக்கிய “பைரவி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து சூப்பர்ஸ்டார் ஆகி மாறினார். இப்படமானது மக்களிடையே பெரிய வரவேப்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து. சில காலங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் தொடந்து படங்களில் ஓய்வின்றி நடித்து வந்ததால் மன அழுத்தத்திற்ககுள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு பிறகு “தில்லு முள்ளு” என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் திரைக்கு மீண்டும் வந்த ரஜினிகாந்த். பின்னர் பல படங்களில் நடித்த ரஜினிகாந்த் பாபா படத்தை தவிர மற்ற பல படங்கள் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்து.சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் சாந்தி திரையரங்கில் ஓடியது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தின் யோக முத்ரா :
ரஜினிகாந்த் தனக்கான ஒரு ஸ்டேல், தனக்கான ஒரு பேச்சு என்று இவர் செய்வது அனைத்தும் தனித்தன்மையாக இருப்பதால் இவர் செய்யும் ஒவ்வொரு செய்கையிம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்தவகையில் ரஜினிகாந்த் பல காலமாகவே திரைப்படங்களில் நடிக்கும் போதோ இல்லை திரைப்படங்களில் நடிக்காமல் சுய வாழ்க்கையின் போதோ தன் கையின் கட்டைவிறல் மற்றும் பெருவிரலை சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றுவர். இதனை நாம் பல புகைப்படங்க்களிலும் ,திரைப்படங்களிலும் பார்த்திருப்போம் அதனை பற்றி யோகா மருத்துவரிடம் கேட்டபோது அவர் அதிர்ச்சி தரும் தகவலை கூறினார்.
அவர் கூறியது :
ரஜினிகாந்த் பின்பற்றும் கை முத்ரா சின் முத்ரா எனப்படும். அப்படி செய்யும் போது மூளை நரம்புகள் நன்றாக வேலைசெய்யும் இதனால் நினைவாற்றல் அதிகமாகும். மனா அழுத்தத்தை குறைத்து மூளை அழுத்தத்தை குறைக்கிறது. கோபம் ,தூக்கமின்மை, தலைவலி இவற்றயெல்லாம் நீக்குகிறது. இதனால் நாம் இந்த சின் முத்திரையில் வைத்து அமரும் போது நம்முடைய நரம்புகளுக்கு அமைதியை கொடுத்து கவனம் சிதறாமல் வைக்கிறது. இதனால்தான் நாம் யோகாவின் போது இந்த முத்திராவை பயன்படுத்துகிறோம் என்றார் மருத்துவர். இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் செய்யும் இந்த சின்ன செயலில் இவ்வள்வு சக்தி இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்