மெர்சல் படத்தின் வெற்றிக்கு காரணமான சரியான 5 விஷயங்கள்!

0
1868
- Advertisement -

தீபாவளிக்கு வெளியாகி தற்போது வரை தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். அதுவும் வெளியாகி 14 நாட்களிலேயே 210 கோடிகள் வசூல் செய்துவிட்டது மெர்சல். வெளியான சில குறைந்த நாட்களிலயே 200 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் மெர்சல் தான். மேலும், விஜய்க்கு இது முதல் 200 கோடி வசூல் செய்த படமாகும்.
mersal
அப்படி என்ன தான் இருக்கிறது படத்தில்? படம் இவ்வளவு ஹிட் கொடுக்க என்ன காரணம்? அதற்கான 5 முக்கிய காரணங்கள் கீழே :

-விளம்பரம்-

1. முதல் காரணம், ‘விஜய்’ இந்த பெயருக்காகவே ரசிகர்களும் மக்களும் அவரை நம்பி தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். மேலும், படம் முழுக்க விஜய் மட்டும் தனி ஆளாக நின்று ஸ்கோர் செய்திருக்கிறார்.

- Advertisement -

2.அடுத்து படத்தின் கதை அம்சம், விஜய்க்கு ஏற்ற கதை மற்றும் படத்தில் பாடல், சென்டிமென்ட், ஆக்சன், காதல், காமெடி என அனைத்தும் போர் அடித்துவிடாதபடி சரியான அளவில் இருந்தது.
mersal
3.படத்தில் உள்ள அந்த சரியான சமூக கருத்து. மக்களை விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் இருந்தது படத்தில் கூறப்பட்ட அழுத்தமான கருத்துக்கள். மேலும், அந்த காட்சிகளால் சில கட்சிகள் ஏற்ப்படுத்திய அந்த தேவையில்லாத பிரச்சனை படத்தியனை தேசிய அளவில் கொண்டு சென்று, அந்த காட்சியில் என்ன தான் இருக்கிறது என படத்தை தேடிச் சென்று பார்த்தனர் மக்கள்.

4.பொதுவாக தீபாவளி அன்று சில பெரிய நடிகளின் படங்கள் வெளியாகும். இதனால் போட்டி உருவாகும். வசூலும் பாதிக்கு பாதி குறையும். ஆனால், இந்த முறை மெர்சல் படம் எந்த ஒரு போட்டியாளரும் இல்லாமல் தனியாக வந்து கொடி நாட்டியதும் பெரிய ப்ளஸ்.

-விளம்பரம்-

5.கடைசியாக, பக்கா டைரக்சன் – பெரிய நடிகர் என்று விஜய்க்கு ஓவர் பில்ட் அப் கொடுக்காமல். சரியாக வைத்து அடித்திருக்கிறார் அட்லீ. அவருக்கு ஏற்ற ஆக்சன், டேன்ஸ், டைலாக் டெலிவரி என அனைத்தையும் சரியாக செதுக்கி இருக்கிறார் அட்லீ
mersal
இப்படியாக அனைத்து பாக்சையும் டிக் செய்து இன்னும் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மெர்சல்

Advertisement