துக்ளக் விழாக்கும் போறார்,கலைஞர் விழாக்கும் போறார் – ரஜினி மகளின் சங்கி குறித்த பேச்சு பற்றி சீமான்.

0
353
- Advertisement -

ரஜினி சங்கி இல்லை என்று பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து குறித்து சீமான் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் தான் லால் சலாம் படம். விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் என்பதால் கபில்தேவையும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு லால் சலாம் வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்தவர்கள், பிறகு வெளியீட்டு தேதியை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு மாற்றினர். இந்நிலையில், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் பேசிய ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ‘சங்கி என்ற வார்த்தை முதலில் எனக்கு தெரியாது, அதை பற்றி தெரிந்த பிறகு ரொம்ப வேதனை அளிக்கிறது. என் அப்பா சங்கி கிடையாது என்பதை ஒரு இயக்குநராக சொல்ல பெருமைப்படுகிறேன் மேலும் ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் ஏன் ’லால் சலாம்’ போன்ற படத்தில் நடிக்கணும்.

சங்கியாக இருந்தால் அவர் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படத்தை பண்ண முடியாது. ஒரு மனித நேயரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும். இந்த படத்தை அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்க எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமைப்படுத்த வேண்டும். ரஜினிகாந்த் சங்கி இல்லை’ என்று கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

-விளம்பரம்-

சமீப காலமாகவே ரஜினி பா.ஜ.கவிற்கு ஆதரவாக பேசி செயல்பட்டு வருகிறார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில் ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு அதனை பொய்யாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா ரஜினியின் இந்த கருத்து குறித்து பேசி ‘சங்கி எல்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்னதை நினைத்து வருத்தப்பட தேவையில்லை. என் மீது கூடத்தான் எவ்வளவோ விமர்சனம் வைக்கிறார்கள். உன் மீது வைக்கப்படும் விமர்சனம் உண்மையில்லை என்றால் எதற்காக கோபப்பட வேண்டும்.

அவர் சங்கு இல்லை ஆமாம் அவர் சங்கி இல்லை தான். அதான் தெரிந்து விட்டது தானே வள்ளுவருக்கு என்னதான் காவி வேஷம் போட்டாலும் அவரை மாற்ற முடியாது என்று சொன்னவர் அவர் தானே. அவருக்கு மோடியும் யோகியும் நண்பர் அவர்கள் கூப்பிட்டால் செல்கிறார். அவருக்கு இமயமலை செல்வது பிடிக்கிறது செல்கிறார். அதே சமயத்தில் துக்ளக் விழாவில் கலந்துகொள்கிறார், கலைஞர் விழாவிற்கு கூப்பிட்டாலும் செல்கிறார் தானே. அவர் ஒரு கலைஞன் அவரை அப்படிதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement