ராஜா ராணி 2 உட்பட, 4 பிரைம் சீரியலுக்கு end card கொடுக்கப்போகும் விஜய் டிவி.

0
1008
raja
- Advertisement -

தொடர்ந்து நான்கு சீரியல்களை விஜய் டிவி நிறுவனம் நிறுத்த இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. அதிலும், சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். குறிப்பாக, தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. சீரியல் மட்டும் இல்லாமல் காமெடி ஷோ, பலவித ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள், வெரைட்டி வெரைட்டியான நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது.

- Advertisement -

விஜய் டிவி சீரியல்கள்:

மேலும், சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் என தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனலான விஜய் டிவி திகழ்கிறது. ரசிகர்களின் பேவரட் சேனலாக விஜய் டிவி விளங்கி வருகிறது. விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ தான் என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள். முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கியது விஜய் டிவியில் தான். மேலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் பிரபலத்திற்கு இணையாக சீரியல்களும் பிரபலமாக இருக்கின்றன. மேலும், விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.

முடிவுக்கு வரும் சீரியல்கள்:

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 4 சீரியல்கள் நிறுத்தப்பட இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் வருகிற ஜூன் மாதத்திற்குள் நான்கு தொடர்களை நிறுத்த இருக்கிறார்கள். அந்த சீரியல்கள் பட்டியல்,

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தமிழும் சரஸ்வதியும்:

இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த தொடரை குமரன் இயக்குகிறார். இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் தீபக், சரஸ்வதி கதாபாத்திரத்தில் நச்சத்திரா நடிக்கிறார்கள். இவர்களுடன் ரேகா கிரிஷ்ணப்பா, தர்ஷனா, மீரா, ரமணிசந்திரன், நவீன் வெற்றி, பிரபாகரன் சந்திரன், அனிதா வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடர் விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

ராஜா ராணி 2:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். இந்த சீரியல் ஏற்க்கனவே முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடர்ந்து விறுவிறுப்பாக செல்வதினால் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், இந்த இரண்டாம் பாகத்தின் கதைக்களம் முற்றிலும் வேறு. இது ஒரு ஹிந்தி சீரியலின் ரீமேக்.

காற்றுக்கென்ன வேலி:

காற்றுக்கென்ன வேலி தொடர் மதியம் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கல்லூரி சீன்கள் அதிகம் என்பதால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி வரும் தொடர் ஆக மாறியுள்ளது. படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். இதனால் சீரியலில் வெண்ணிலாவுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான் கதை:

இப்படி இந்த நான்கு தொடரும் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதெல்லாம் ஏப்ரல் மாதம் fool ஆக கூட இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து விஜய் டிவி நிறுவனம் தான் கூற வேண்டும்.

Advertisement