ஹேரிஸ் ஜெயராஜும் இல்ல, Arவும் இல்ல – தாமரையை அறிமுகம் செய்து வைத்ததே சீமான் தான். அதுவும் யார் இசையில் பாருங்க.

0
797
thamarai
- Advertisement -

பாடலாசிரியர் தாமரையை சினிமா உலகில் அறிமுகப்படுத்தியது சீமான் தான் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடலாசிரியராக திகழ்பவர் தாமரை. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் கவிஞர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே கவிதை, சிறுகதை எழுதுவதில் அதிக ஆர்வம்.

-விளம்பரம்-

அதோடு பல பத்திரிகைகளுக்கு இவர் எழுதிய கவிதைகளையும் அனுப்பி அதற்கான பரிசுகளையும் பெற்றிருந்தார். மேலும், இவருக்கு பாடல் ஆசிரியர் ஆக வேண்டும் என்பது தான் விருப்பமாம். அதற்காக தான் இவர் சென்னைக்கே வந்தார். ஆரம்பத்தில் இவர் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்று தான் எழுதி இருந்தார். பின் இவர் திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

தாமரை எழுதிய பாடல்கள் :

அந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக இயக்குனர் சீமானுடைய அறிமுகம் தாமரைக்கு கிடைத்தது. சீமானும் இவருடைய திறமையை புரிந்து கொண்டு 1998 ஆம் ஆண்டு இவர் இயக்கிய இனியவளே என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் தாமரை அவர்கள் தென்றல் எந்தன் நதியை கேட்டது என்ற பாடல் எழுதியிருந்தார். இந்த படத்தின் மூலம் தான் தாமரை பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.

மின்னலே வசீகரா பாடல் :

இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. பின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மாதவன் நடிப்பில் வெளிவந்த மின்னலே திரைப்படத்தில் இவர் எழுதிய வசீகரா பாடல் மிகவும் புகழ்பெற்றது. இந்த பாடலின் மூலம் தான் இவருடைய வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற பல வெற்றி படங்களில் இவருடைய பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

No ஆங்கில சொற்கள் :

பின்னர் பாடலாசிரியர் தாமரை அவர்கள் தமிழ் சினிமா உலகில் பிரபலமானது மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். அதுமட்டு இவர் எழுதும் பாடல்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தவது கிடையாது. அதை பயன்படுத்தக் கூடாது என்ற உறுதியும் கொண்டிருக்கிறார்.

தாமரை பெற்ற விருதுகள் :

திரைப்படம் போது கவர்ச்சி போதையில் சிக்காமல், குத்து பாடல்கள், ஆபாச பாடல்கள், சமூகத்தை சீரழிக்கும் பாடல்கள், பிறமொழி பாடல்கள் என தமிழ் மொழியை கேவலப்படுத்தக்கூடிய வார்த்தைகளைக் கொண்டு பாடல்களை எழுத மாட்டேன் என்று இவர் குறிக்கோளாகவும் இருக்கிறார். இலக்கிய படைப்புகளுக்காக இவருக்கு திருப்பூர் தமிழக சங்க விருது, சிற்பி விருது போன்ற பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்று இருக்கிறார்.

Advertisement