அது ஏன் தேர்தல் நேரத்துல மட்டும் இந்த விஷயம் பேசுபடுத்து – விஜயலக்ஷ்மி குற்றச்சாட்டுக்கு முதன் முறையாக சீமான் விளக்கம்.

0
2317
- Advertisement -

விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டுக்கு முதல் முறையாக பதில் அளித்துள்ளார் சீமான். பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி இந்த படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார்.

-விளம்பரம்-

அதில் தன்னை சீமான் காதலித்த நிலையில் இருவரும் 2008 ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றி கொண்டதாகவும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதாகவும் இதையடுத்து வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் பலமுறை தான் கர்ப்பம் அடைந்த நிலையில் அவரது வற்புறுத்தலால் கருவை கலைத்ததாக குற்றம்சாட்டினார்.

- Advertisement -

மேலும், தன்னிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அந்த வழக்கானது அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்ததார்.

இதுவரை இந்த புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் அளித்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதே புகார் மனு அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து பேட்டி அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த புகார் மனு மீது விசாரணை செய்ய கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை கமிஷனர் உத்தரவிட்ட நிலையில் நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிசனர் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 6 மணி நேரத்திற்கும் செயலாளர் நடைபெற்ற சோதனையின் போது விஜயலட்சுமி போலீசின் நிலையத்திலிருந்து வெளியே வராமல் இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சந்திப்பில் பேசிய சீமான் வருகிற தேர்தலுக்கான பணிகளை தற்போது துவங்கி இருக்கிறோம் கடந்த தேர்தலில் என்ன தவறு செய்தால் அதை எப்படி மேம்படுத்தலாம் என்ற ஆலோசனை தான் இனிமேல் நடைபெறும் என்று கூறியிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களை பல பேர் பின் தொடர்கிறார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக விஜயலட்சுமி உங்கள் மீது தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இது குறித்து நீங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சீமான் ‘என் மீது உள்ள அக்கறையில் கேட்கிறீர்களா ? உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டு உண்மையில்லை என்றால் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நல்ல பதிலின் தாயே ஒரு நல்ல கேள்விதான் என்கிறார்கள். நீங்கள் நல்ல கேள்வியைத் தான் கேட்க வேண்டும் இதனை குற்றச்சாட்டு என்று நம்பி இருந்தால் எத்தனை லட்சம் இளைஞர்கள் என்னை எப்படி பின் தொடர்வார்கள்.

அவதூருக்கு அஞ்சு பவன் அப்ப வெற்றிகளை கூட தொட முடியாது அது ஏன் எப்போதும் தேர்தல் நேரத்தில் மட்டும் இது பேசப்படுகிறது. 11 வருடங்களாகவா ஒரே குற்றச்சாட்டு. உங்களை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ‘உங்களை ஒரு பெண் ஏமாற்றிவிட்டு சென்று விடுகிறாள். அவள் அவருடைய புருஷனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் போய் அனைவரிடமும் என்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று இந்த பெண் ஏமாற்றி விட்டால் என்று நான் சொன்னால் காரித் தூக்கி செருப்பை கழட்டி அடிக்க மாட்டீர்கள்.

ஆனால், அதை ஏன் இந்த ஊடகம் அனைத்தும் ரசிக்கிறீர்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, எனக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், என்னை சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. ஆனால், அதையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதே போன்ற குற்றச்சாட்டு வெவ்வேறு மொழிகளில் எனக்கு முன்னால் ஐந்து பேருக்கு இருக்கிறது. இனிமேல் இதை விட்டு விடுங்கள் அவசியமான கேள்விகளை மட்டும் கேளுங்கள். நான் என்ன இங்கிருந்து ஓடியா சென்று விட்டேன் நான் தவறு செய்திருந்தால் போலீஸ் விசாரிக்கட்டும் திமுக ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுத்து தான் பாருங்களேன் அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement