லியோ படத்தின் டிரைலரில் விஜய் பேசிய சர்ச்சைக்குறிய வார்த்தை – சீமான் கருத்து என்ன ?

0
1079
- Advertisement -

விஜய்யின் நடித்து வெளி வர உள்ள லியோ படத்தின் டிரைலரில் ஆபாச வார்த்தையை விஜய் பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது சீமான் அவருக்கு ஆதரவாக கருத்து ஒன்றை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது. விமர்சனம் ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியில் எப்போதுமே வெற்றி பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் லீயோ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படம் LCU யூனிவர்சிற்குல் வரும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகிஇருக்கிறது. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றி தான். அந்த வகையில் இந்த பட ட்ரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை தான் பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

அதில் ‘லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா?திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? விஜய். ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன்.

சீமான் கருத்து:

இந்நிலையில் சீமான் கூறுகையில் “அது சாதாரண மக்கள் மொழியில் இயல்பாக வரும் ஒரு வார்த்தை தான். என் தம்பி வெற்றிமாறனை எடுத்துக் கொண்டால் வடசென்னை படத்தில் அது போன்ற வார்த்தைகள் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது எங்களுடைய மொழி. நாங்கள் வந்து வாருங்கள் அமருங்கள் உட்காருங்கள் என்று எல்லாம் பேச மாட்டோம். இயல்பாக படம் எடுக்கும் நிலை வரும் போது இது மாதிரி வார்த்தைகளும் வரும். இதனை நீங்கள் வெப்சீரிஸ்களை எடுத்துக் கொண்டால் இதை விட கேவலமான வார்த்தைகளும் அதில் இடம் பெற்று இருக்கும்.

-விளம்பரம்-

வார்த்தைகளை சமூகம் எப்படி கருதும் என்பதில் தான் இருக்கின்றது. மயிறு என்ற சொல்லையே நாம் கேட்ட வார்த்தையாக மாற்றி விட்டோம். வேதங்களில் மயிர் என்ற வார்த்தை வருகிறது அதைக் கெட்ட வார்த்தை என்றால் எதற்கு எண்ணெய் தேய்த்து பராமரித்து வர வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் அதனை மொட்டை அடித்து விடலாமே. அது கொட்டி விட்டால் அதன் பின்பு விக்கையின் தலையில் வைக்கிறீர்கள். அதன் பின் மூன்று நான்கு லட்சங்கள் செலவு செய்த அதனை ஏன் வளர செய்கிறீர்கள்.

அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே ஆகையால் அத்தனை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது. தம்பி விஜய் புகைப்பிடிப்பதால் அனைவரும் புகைப்பிடிக்கிறார்கள் அவர் மது அருந்துவதால் அனைவரும் மறந்து அருந்துகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளக்கூடாது. இருந்தாலும் தணிக்கை குழு அந்த வார்த்தையை நீக்க இருக்க வேண்டும் அல்லது அந்த இடத்தில் ஒலியை சேர்த்து அந்த வார்த்தை மறைத்திருக்க வேண்டும்” என்றும் நாம் தமிழர் கட்சியினரின் இணைப்பால் சீமான் கூறியிருந்தார்.

Advertisement