ஜீவாவின் சீறு படம் சீறிப் பாய்கிறது. விமர்சனம் இதோ…

0
17828
- Advertisement -

விஜய் சேதுபதியை வைத்து ரெக்க படத்தை இயக்கிய இயக்குனர் ரத்தன சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சீறு. இந்த படத்தில் ஜீவா, ரியா சுமன், வருண், நவ்தீப், காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்து உள்ளார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படம் நட்பு, குடும்பம், பாசம் என கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. சமீப காலமாகவே நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. தற்போது இந்த சீறு படம் சீறிப் பாய்கிறதா? என்பதை பார்க்கலாம்..

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

இந்த படத்தில் ஜீவா மணிமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஜீவா மாயவரத்தில் தனியார் கேபிள் டிவி ஒன்று வைத்து நடத்தி வருகிறார். ஜீவா தன் தங்கையுடன் வாழ்ந்து கொள்கிறார். தன் தங்கை கர்ப்பமான நிலையில் இருக்கும் போது அவரை உள்ளங்கையில் வைத்து தாங்குகின்றார். இந்த நிலையில் ஊரில் எம்எல்ஏ செய்யும் தவறான வேலைகளை எல்லாம் ஜீவா தன்னுடைய கேபிள் டிவி மூலம் வெளியே விடுகிறார். இதனால் கோபமடைந்த எம்எல்ஏ ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார். பின் ஜீவாவை கொல்ல சென்னையில் உள்ள மல்லி (வருண்) என்ற ரவுடியை அழைக்கின்றார் எம்எல்ஏ. மல்லி, ஜீவாவை தேடி மாயவரம் வருகிறார். அப்போது மல்லி மாயா வரத்திற்கு வரும் போது ஜீவாவின் தங்கை பிரசவ வலியால் துடிக்கிறார்.

பின் ஜீவாவின் தங்கையை மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றுகிறார். தன்னைக் கொல்ல வந்த இடத்தில் தன் தங்கையின் உயிரை காப்பாற்றிய மனிதாபிமானத்தை நினைத்துப் பெருமைப்படுகிறார் ஜீவா. அப்போதிலிருந்தே ஜீவாவும், மல்லியும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். பின் ஜீவா சென்னைக்கு மல்லியை தேடி செல்கிறார். அப்போது தான் மல்லிக்கு ஒரு பெரிய ரவுடியினால் ஆபத்து இருக்கிறது என்று ஜீவாவுக்கு தெரிய வருகிறது.

-விளம்பரம்-

அதன் பிறகு மல்லியை ஜீவா காப்பாற்றினாரா? அந்த பெரிய ஆள் ரவடி யார்? அந்த பெரிய ரவுடிக்கும், மல்லிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவா ஒரு நல்ல ஆக்ஷன் களத்தில் இறங்கி உள்ளார். இந்த படத்தில் ஜீவா ஆக்ஷன், சென்டிமெண்ட் என பயங்கரமாக அசத்தி இருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் ஜீவா வேற லெவல்ல வித்தியாசமாக காட்சி அளித்திருக்கிறார். இந்த படத்தில் அண்ணன்– தங்கச்சி பாசம் பார்க்கும் போது மீண்டும் திருப்பாச்சி விஜய் படத்தை பார்த்தது போலவே இருந்தது. இந்த படத்தில் பெரிய ரவுடியாக நவ்தீப் நடித்திருக்கிறார். படத்தில் நடிகை ரியா சுமன் கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் அழகாக நடித்து உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக அமைந்து உள்ளது.

பிளஸ்:

கலகலப்பான காமெடி, அதிரடி, ஆக்ஷன், ஏமோஷனல், காதல் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உள்ளது.

படத்தில் இமானின் பின்னணி இசை சூப்பர்.

தங்கச்சி சென்டிமென்ட் வேற லெவல்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

படத்தின் முதல் பாதி, பிளாஷ்பேக் எனத் தொடங்கும் காட்சிகள் எல்லாம் பயங்கர விறுவிறுப்பாக சென்றது.

இந்த படத்தில் நடிகர் ஜீவா அவர்கள் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மைனஸ்:

இரண்டாம் பாதி தான் கொஞ்சம் போரடிக்கிற மாதிரி இருக்கு.

வில்லன் கதாபாத்திரம் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

ஹீரோயினி கதாபாத்திரம் ஏதோ இருக்கணும் என்று உள்ளது.

இறுதி அலசல்:

இந்த படத்தில் அண்ணன்-தங்கை பாசம், நட்புக்கு முக்கியத்துவம், அதிரடி ஆக்ஷன் என எல்லாம் கலந்த பக்காவான கமர்சியல் படமாக உள்ளது. மொத்தத்தில் “சீறு படம் — சீறிப் பாய்கிறது”.

Advertisement