இவர்கலாம் ஒரு உலகநாயகன், விஜய்லாம் செய்யல – கமலை வெளுத்து வாங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்.

0
410
kamal
- Advertisement -

திமுகவுக்கு கமலஹாசன் லாலி பாடுகிறார் என்று செல்லூர் ராஜூ அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரமாக சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருந்தது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். கடந்த வாரம் தான் காற்றின் வேகம் குறைந்து மழை பெய்வது நின்றது.

- Advertisement -

தற்போது மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் மதுரையில் நடந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார். அதில், சென்னையில் வெள்ளம் வற்றிய பாடில்லை. மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு செயலிழந்து விட்டது.

40 நாட்களுக்கு முன்பே வானிலை ஆய்வாளர்கள் புயல் குறித்து எச்சரிக்கை கொடுத்திருந்தார்கள். இருந்தும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கையாக அனைத்தையுமே மக்களுக்காக செய்துவிட்டோம் என்று சொல்லி சொல்லி கடைசி வரை அவர்கள் எதையுமே செய்யவில்லை. மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் உடைமைகளையும் சொத்துகளையும் மக்கள் இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு வரலாறு காணாத மழை சென்னையில் பெய்திருக்கிறது. இதற்கு முன்பே அதிமுக ஆட்சியில் ஐந்து நாட்கள் மழை பெய்தது.

-விளம்பரம்-

அடுத்தடுத்து வர்தா, கஜா புயல்கள் எல்லாம் வந்தது. மக்கள் எதிர்பாக்காத அளவிற்கு நிவாரண பொருட்களையும் நிதிகளையும் கொடுத்திருந்தோம். யாரையும் கட்டாயப்படுத்தி நிவாரண நிதி பெறவில்லை. வரும் நிதியை வைத்து மக்களுக்கு நிவாரணம் கொடுத்தோம். மழைக்காலத்தில் ஒரு ராணுவ தளபதி போல ஜெயலலிதா அம்மா செயலாற்றி இருந்தார். 6000 ரூபாய் நிவாரணத் தொகையை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் இது போன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுப்பார்கள். பாதிப்பை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

அரசாங்கம் அதனை கவனித்து சரி செய்ய வேண்டும் . இறந்து போனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுப்பதெல்லாம் குறைவான தொகை. 10 லட்சம் ரூபாயாவது அவர்களுக்கு இழப்பீடாக கொடுக்க வேண்டும். அரசாங்கம் செயலிழந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. சென்னையின் இந்த நிலைக்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு. திமுக தங்களுடைய வீட்டில் இருந்தா நிறைய எடுத்துக் கொடுக்கப் போகிறார்கள். அரசு பணத்தை தானே கொடுக்கிறார்கள். மக்கள் நிம்மதி அடையும் வகையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

கமல் குறித்து சொன்னது:

கமலஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலில் ஒரு சீட்டுக்காக திமுகவிற்கு லாலி பாடுகிறார். அவர் திமுகவின் ஊது குழலாக இருக்கிறார். கமலஹாசன் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்க மாட்டார்கள். கமலஹாசன் திமுகவிற்கு ஆதரவாக பேசினால் இனிமேல் அவர் ரசிகர்களும் விநியோகஸ்தர்களும் அவரை விட்டு விலகிவிடுவார்கள். அவர் நிழல் கூட அவருடன் இருக்காது. துன்பத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமலஹாசன் பேசவில்லை. அவர் அரசியல் நாகரீகம் அற்றவர். மதுரையில் கட்சி தொடங்கிய போது கமலஹாசன் பேசிய வீராப்பு இப்போது எங்கு சென்றது. அதேபோல் விஜய் எங்களுக்கு போட்டி என்றெல்லாம் சொல்லக்கூடாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களுடைய விருப்பம். நான் விஜய்யின் ஊது குழலில்லை என்று பேசி இருந்தார்.

Advertisement