இந்து கடவுளை அவமானப்படுத்திய செம்பருத்தி சீரியல்..! அதிர்ச்சியில் சீரியல் குழு.! போலீசில் புகார்.!

0
2612
Sembarathi
- Advertisement -

திரைப்படங்களில் வரும் சில சர்ச்சைக்குரிய காட்சிகளை எதிர்த்து பல வழக்குகள் துவங்கபட்டுள்ளன. ஆனால் சமீபத்தில் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி”.என்ற தொடரில் கடவுளை அவமக்கும் சில காட்சி இடம்பெற்றதாக வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது சின்னத்திரையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

sembaruthi-serial

- Advertisement -

ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி” தொடர் வெற்றிகரமாக 200 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஆபீஸ்” தொடர் மூலம் பிரபலமான கார்த்திக் இந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான இந்த தொடரின் காட்சி ஒன்றில் இந்து கடுவுளான ராமர் மற்றும் சீதை இருக்கும் சிலை ஒன்றை கீழே போட்டு உடைப்பது போன்ற காட்சி வெளியாகி இருந்தது. இந்த காட்சி இந்து கடவுளை அவமதிப்பதாக இருக்கிறது என்று ஈஷ்வரமூர்த்தி என்ற வழக்கறிஞர் ஒருவர் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஜீ தொலைக்காட்சி மீதும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement