தாலாட்டு சீரியலுக்கு சென்ற செம்பருத்தி சீரியல் வில்லி – அப்போ செம்பருத்தி சீரியலில் இனி வரமாட்டாரா ?

0
926
thaalttu
- Advertisement -

பொதுவாகவே சின்னத்திரை சீரியல் நடிகர்கள் சூழ்நிலை காரணமாக சீரியலை விட்டு விலகுவது வழக்கமான ஒன்று தான். அதிலும் சமீபகாலமாக பல சேனல்களில் இருந்து பல நடிகர்கள் மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்றான செம்பருத்தி சீரியலில் நடிக்கும் நடிகை மௌனிகா வேறு ஒரு சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து வருடமாக மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு தற்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். இந்த தொடர் தெலுங்கு மொழியில் வெளிவந்த ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் தழுவல். இந்த தொடரில் முதலில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து வந்த நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது அக்னி சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நாயகியாக ஷபானா நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மௌனிகா.

- Advertisement -

செம்பருத்தி சீரியல் மௌனிகா:

இவர் சீரியலில் வனஜாவுக்கு இணையாக வில்லத்தனம் செய்து கலக்கிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் இருந்து மௌனிகா விலகப் போகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மௌனிகா. இவர் மாடலிங் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார். பின் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களின் தொடர்களில் நடித்து இருக்கிறார்.

தாலாட்டு சீரியல்:

தற்போது இவர் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தாலாட்டு சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் தாலாட்டு. இந்த தொடரில் கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீலதா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அம்மா- மகன் இடையேயான பாச கதையை கொண்டது தான் தாலாட்டு சீரியல் . ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-

தாலாட்டு சீரியலில் விலகிய மலர்:

மேலும், இந்த சீரியலில் தாரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக செய்தி தொகுப்பாளினி மலர் நடித்து வந்திருந்தார். வில்லியாக இருந்தாலும் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிடித்தமானவர் ஆனார். இந்த நிலையில் மலர் வேறு சில காரணங்களால் இந்த சீரியல் இருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பிறகு இந்த சீரியலில் யார் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த சீரியலில் செம்பருத்தி சீரியல் மௌனிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாலாட்டு சீரியலில் மௌனிகா:

மேலும், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக சின்னத்திரை வட்டாரங்களில் உறுதியாகி உள்ளது. பெரும்பாலும் நெகட்டிவான கதாபாத்திரங்களில் மௌனிகா அசத்துவார். அதனால் தாலாட்டு சீரியலும் அவர் மிரட்டுவார் என்றுரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் தாலாட்டு சீரியலில் நடிக்க இருப்பதால் செம்பருத்தி சீரியலிருந்து விலகி விட்டாரா? இவரே தொடர்ந்து நடிப்பாரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதற்கு மௌனிகா தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement