கலையரசன்,வணிபோஜன் நடித்துள்ள செங்களம் எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
1184
Sengalam
- Advertisement -

இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் செங்களம். இந்த தொடரில் கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அபி அண்ட் அபி என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தருண் குமார் இசையமைத்திருக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லர் பாணியில் இந்த வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்கள். பழைய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் இந்த செங்களம் வெப் சீரிஸ் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

வெப் தொடரில் கலையரசன் மற்றும் அவரது தம்பிகள் இரண்டு கொலைகளை செய்துவிட்டு காட்டில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எம்எல்ஏ, ஊர் சேர்மன் போன்ற அரசியல் பிரமுகர்களை ஒவ்வொருவராக கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இவர்களையெல்லாம் போலீஸ் வலை வீசி தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம், ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று எந்த கட்சியிலும் இல்லாமல் தனியாக கட்சி தொடங்கி 40 ஆண்டுகளாக சரத் கொகித்சவா குடும்பம் விருதுநகர் பகுதியில் சேர்மன் ஆக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த தலைமுறையிலிருந்து வந்தவர் தான் பவன். இவர் சேர்மன் ஆக இருக்கிறார். இவருக்கு இரண்டாவது மனைவியாக வாணி போஜன் வருகின்றார். ஒரு கட்டத்தில் விபத்தில் பவன் இறந்து விடுகிறார். அந்த சேர்மன் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று வாணிபோஜன் முயற்சி செய்கிறார். அவருக்கு உறுதுணையாக அரசியலில் அறிவு படைத்த கலையரசன் உடைய தங்கை ஷாலி உதவி செய்கிறார். மேலும், இருவரும் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி சேர்மன் பதவியை வாணி போஜன் பிடித்து வருகிறார்.

மேலும், கலையரசன் அவர்களுடைய தம்பிகள் கொலை செய்வதற்கும், வாணி போஜன் சேர்மன் பதவி அடைந்ததற்கும் ஒற்றுமை என்ன? இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? அரசியல் வாரிசுகளால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? கலையரசனின் திட்டங்கள் நிறைவேறியதா? போலீஸ் அவர்களை கைது செய்தார்களா? என்பதே இந்த வெப்சீரிஸின் கதை. நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கலையரசன், வாணி போஜன் உடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும், வாணி போஜன் மற்றும் ஷாலியுடைய காட்சிகள் எல்லாம் திரில்லிங்காகவும், சாமர்த்திய தனமாக அருமையாக இருக்கிறது. சுந்தரபாண்டியன், கதிர்வேலனின் காதல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பிரபாகரன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். குடும்பம், காதல், ரொமான்ஸ் பாணியில் உருவாக்கியிருந்த இவர் கொஞ்சம் வித்தியாசமாக பொலிட்டிக்கல் திரில்லர் பாணியில் கதையை எடுத்துச் சென்றிருப்பது பாராட்டுக்குரிய வகையில் இருக்கிறது.

இந்த வெப்சீரிஸ் முதல் ஐந்து எபிசோடுகள் பொறுமையாக சென்றிருக்கிறது. பின் அரசியல் விஸ்வரூபம் எடுக்கும் போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. ஒரு முழு நீள திரைப்படத்திற்கான கதையை இயக்குனர் வெப்சீரிஸ் ஆக மாற்ற அவர் கையாண்டிருக்கும் யுத்திகள் பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால், ஆரம்பம் தான் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அரசியலில் நடக்கும் சூழ்ச்சியை கதைக்களமாக இயக்குனர் காண்பித்து இருக்கிறார். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் நிகழ்வுகளை தான் காண்பித்து இருக்கிறார்.

சில காட்சிகள் எல்லாம் நிஜ நிகழ்வுகளாக இருந்தாலும் அதை கொஞ்சம் சினிமாவுக்கு ஏற்றவாறு மாற்றி காண்பித்து இருக்கிறார். ஆனால், ஆரம்ப எபிசோட்களின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்
பின்னணி இசையும் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. ஆரம்ப எபிசோடுகள் சலிப்பை கொடுத்திருந்தாலும் இறுதி சில எபிசோடுகள் நன்றாக வந்திருக்கிறது. சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு சுமாரான படமாக அமைந்திருக்கிறது.

நிறைகள் :

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

முழு திரைப்படத்தை வெப் சீரிஸ் ஆக இயக்குனர் கையாண்ட விதம் அருமை

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

தற்போதைய அரசியல் நிலைமையை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்

குறைகள் :

முதல் முதல் ஐந்து எபிசோடுகள் பொறுமையாக சென்றிருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

ஆரம்பத்தில் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம்

மொத்தத்தில் செங்களம்- அரசியல் தந்திரம்

Advertisement