இதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகி விட்டேன் – மனம் திறந்த நடிகை.

0
520
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இருந்து முக்கிய நடிகை விலகிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி இருந்தது. கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடையும் முன்னரே இரண்டாம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் இரண்டாவது பாகத்தின் டைட்டில். தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இந்த சீரியலில் புது முகங்கள் சில பேர் இருந்தாலும், பழைய முகங்களும் இருக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். பாண்டியனுக்கு, பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக திருமணம் நடந்து விடுகிறது. ஆனால், மூத்த மகன் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை.

சீரியல் கதை:

இதனால் வீட்டில் எல்லோருமே அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதோடு முன்பை விட கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஒரு வழியாக சரவணனுக்கு சம்பந்தம் பேசி முடிக்கப்படுகிறது. தங்க மயிலை தான் சரவணன் திருமணம் செய்ய இருக்கிறார். தாங்கள் வசதியான குடும்பம் என்று பொய் சொல்லி திருமணம் செய்ய இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் இருந்து விலகிய நடிகை:

திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தில் தங்க மயிலுக்கு விருப்பமில்லை. இப்படி பரபரப்பாக சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாரி கதாபாத்திரத்தில் நடித்த ரிஹானா தொடரில் இருந்து விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இது தொடர்பாக ரிஹானா கூறியது, என்னுடைய தனிப்பட்ட காரணங்களால் தான் நான் தொடரில் இருந்து விலகுகிறேன்.

சீரியலில் விலக காரணம்:

கதைப்படி என்னுடைய கதாபாத்திரம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதால் என்னால் பிரேக் கொடுக்க முடியாது. அதனால் மட்டும் தான் தொடரில் இருந்து விலக வேண்டி ஆகிவிட்டது. உங்களை போல நானும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலியை ரொம்பவே மிஸ் பண்றேன் என்று கூறியிருந்தார். தற்போது இவர் நடித்த மாரி கதாபாத்திரத்தில் நடிகை மாதவி நடிக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இனியா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய படங்களிலும் நடித்திருந்தார். சினிமா வாய்ப்புகள் குறை தொடங்கிய உடன் தான் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement