சமீப காலமாகவே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் ஏராளம். அந்த வகையில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, ஷிவானி என்று பலர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.
அதிலும் பகல் நிலவு சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த ஷிவானி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதிலும் 4 மணி 5 மணி என்று தினமும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஷிவானி, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனை விட சமூக வளைத்தையில் முந்திக்கொண்டு சென்று வருகிறார்,
நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் சசி குமாரின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு அந்த அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. பேட்ட படத்திற்கு பின்னர் இவர் நடத்திய போட்டோ ஷூட் தான் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் மூலம் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
ஆனால், இவரை விட சீரியல் நடிகை ஷிவானி இன்ஸ்டாகிராமில் லீடிங்கில் சென்று கொண்டு இருக்கிறார். ஆம், மாளவிகா மோகனை விட ஷிவானியை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அதிகம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதாவது தற்போது வரை ஷிவானியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். ஆனால், மாளவிகா மோகனை 1.6 மில்லியன் பேர் தான் பின்தொடர்கின்றனர்.