மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பேவரட்டாக சீரியல்கள் விளங்குகிறது. மேலும், சீரியல் மட்டுமில்லாமல் சீரியல் நடிக்கும் நடிகர்களும் மக்களின் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அதில் சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் சித்து-ஸ்ரேயா.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அதே தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. மேலும், இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் குறித்து சோசியல் மீடியாவில் பல கேள்விகளும், கருத்துக்களும் எழுந்து இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் அதற்கு மௌனம் சாதித்து இருந்தனர்.
சித்து-ஸ்ரேயா காதல்:
பின் சீரியல் மூலம் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் கிளம்பியது. அதோடு சோசியல் மீடியாவில் இவர்களுடைய ஜோடி புகைப்படங்கள் தான் அதிகமாக வைரல் ஆகி இருந்தது. அதற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். தற்போது சித்து அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சித்து-ஸ்ரேயா நடிக்கும் சீரியல்கள்:
இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் சந்தியாவின் கனவு என்ன என்பதை சரவணன் கண்டுபிடிக்கிறார். இதை நிறைவேற்றுவாரா? இல்லையா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோல் ஸ்ரேயா விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி என்ற தொடரில் ஸ்ரேயா நடித்து இருந்தார். கடந்த ஆண்டு தான் அந்த சீரியலும் முடிவடைந்தது.
சித்து-ஸ்ரேயா திருமணம்:
தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நீண்ட நாட்களாக காதல் பறவைகளாக திகழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் தான் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
சித்து-ஸ்ரேயா வாங்கிய கார்:
மேலும், திருமணத்திற்குப் பிறகும் இருவரும் சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். இவர்கள் ரிலீஸ் வீடியோ, புகைப்படம் என்று ஏதாவது ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இருவரைப் பற்றிய ஒரு ஸ்பெஷலான விஷயம் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அதுஎன்னவென்றால், இருவரும் சேர்ந்து புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்கள். இந்நிலையில் இருவரும் சேர்ந்து தங்களது காரின் முன்பு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.Morris garage hector என்ற இந்த வகை காரின் விலை 13 லட்சம் இருக்குமாம்.